விமான நுழைவு அனுமதிச் சீட்டை மாற்றிக்கொண்ட பயணிகள் கைது

2 mins read
f1281bb3-3c87-4b7b-b985-ebcba41ae4c2
-

மும்பை: மும்பை அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் இலங்­கை­யைச் சேர்ந்த ஓர் ஆட­வர் 'போர்­டிங் பாஸ்' எனப்­படும் விமான நுழைவு அனு­ம­திச் சீட்­டு­டன் இங்­கி­லாந்து செல்­லும் விமா­னத்­தில் ஏறி­னார்.

பின்­னர் தக­வல்­களைச் சரி­பார்க்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த விமான நிலைய அதி­கா­ரி­கள், கடப்­பி­த­ழில் உள்ள முத்­திரை எண்­ணும் ஆட­வ­ரது நுழைவு அனு­ம­திச் சீட்­டில் இருந்த முத்­திரை எண்­ணும் மாறு­பட்­டி­ருந்­த­தைக் கண்­டு­பி­டித்­த­னர்.

உடனடியாக அதுகுறித்து இங்­கி­லாந்து விமான நிலைய அதி­கா­ரி­க­ளுக்குத் தக­வல் தெரி­வித்­த­னர். அதை­ய­டுத்து இங்­கி­லாந்­தில் இறங்­கிய இலங்கை நாட்­ட­வர் மும்­பைக்கு திருப்பி அனுப்­பப்­பட்­டார்.

மும்பை வந்­த­வு­டன் ஆட­வரைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

விசா­ர­ணை­யில், இம்­மா­தம் 9ஆம் தேதி மும்பை விமான நிலை­யத்­துக்கு அருகே உள்ள ஹோட்­ட­லில் தான் தங்கி இருந்­த­போது அதே ஹோட்­ட­லில் தங்கி இருந்த ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த ஆட­வ­ரின் அறி­மு­கம் கிடைத்­த­தாக அவர் கூறி­னார்.

இலங்கை நாட்­ட­வர் நேப்­பா­ளத்­தின் காட்மாண்டு நக­ருக்­கும் ஜெர்­மா­னி­யர் இங்­கி­லாந்­திற்­கும் செல்­லத் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.

ஆனால் இரு­வ­ரும் தங்­க­ளின் விமான நுழைவு அனு­ம­திச் சீட்டை மாற்­றிக்­கொண்டு வெவ்­வேறு நாடுகளுக்குச் செல்ல முடிவு செய்­த­னர்.

அதன்­படி, விமான நிலை­யத்­தில் அவ­ர­வர் அனு­ம­திச் சீட்­டைப் பெற்­றுக்­கொண்­ட­னர். பிறகு அங்­கு உள்ள கழி­வ­றை­யில் இரு­வ­ரும் தங்­க­ளின் அனு­ம­திச் சீட்­டு­களை மாற்­றிக்­கொண்­ட­தாக இலங்கை ஆட­வர் கூறி­னார்.

அந்­தத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில் காட்மாண்டு செல்­ல­வி­ருந்த ஜெர்­மா­னி­ய­ரும் கைது செய்­யப்­பட்­டார்.

இரு­வர் மீதும் மோசடி, சதி ஆகிய பிரி­வு­க­ளின்­கீழ் காவல்­துறை­யி­னர் வழக்­குப் பதிவு செய்­த­னர். சம்­ப­வத்­தில் வேறு யாருக்­கும் தொடர்பு இருக்­கி­றதா என்­பது குறித்து விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.