'யார் விலகினாலும் தொண்டர்கள் உள்ளனர்'

'யார் விலகினாலும் தொண்டர்கள் உள்ளனர்'

2 mins read
7868bf96-89e6-42cf-bd07-5b35fcbf1a2c
-

பெங்­க­ளூரு: கர்­நா­டகா பார­திய ஜன­தா­வி­லி­ருந்து யார் வில­கி­னா­லும் தொண்­டர்­கள் உறு­தி­யாக கட்­சி­யில் இருக்­கின்­ற­னர் என்று அம்­மா­நி­லத்தை ஆளும் அக்­கட்­சி­ யின் முதல்­வரான பச­வ­ராஜ் பொம்மை அறி­வித்­துள்­ளார்.

இம்­மா­நி­லத்­தில் நடை­பெ­றும் சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு 212 தொகு­தி­க­ளுக்கு பாஜக வேட்­ பா­ளர்­களை அறி­வித்­துள்­ளது.

ஆனால் முக்­கிய உயர்­மட்­டத் தலை­வர்­கள், பிர­மு­கர்­கள் சில­ருக்கு வாய்ப்பு கிடைக்­க­வில்லை. அவர்­கள் மற்ற கட்­சி­க­ளுக்­குத் தாவி வரு­கின்­ற­னர். இத­னால் கர்­நா­டகா பாஜக தலைமை கலகலத்துப் போயுள்ளது.

இந்த நிலை­யில் அம்­பேத்­கர் ஜெயந்­தியை முன்­னிட்டு பெங்­ க­ளூரு விதான சவுதா வளா­கத்­தில் உள்ள அம்­பேத்­கர் சிலைக்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­திய முதல்­வர் பசவராஜ் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"தேர்­த­லில் போட்­டி­யிட பொது­வாக ஆளுங்­கட்­சி­யில் அதி­க­மா­னோர் வாய்ப்பு கேட்­பது வழக்­கம். சில தலை­வா்­கள் எம்.எல்.ஏ. ஆக வேண்­டும் என்ற ஆசை­யில் கட்­சி­யை­விட்டு வெளி­யே­றி­ உள்­ள­னர். அவர்­கள் சென்­றா­லும் தொண்­டர்­கள் கட்­சி­யில்­தான் உள்­ள­னர். கட்சி வலு­வாக உள்­ளது," என்றார் திரு பச­வ­ராஜ் பொம்மை.

பா.ஜன­தா­வில் வாய்ப்­புக் கிடைக்­காத எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்­றும் நிர்­வா­கி­கள் அக்­கட்­சிக்கு எதி­ராக போர்க்­கொடி தூக்­கி­யுள்­ள­னர். அக்­கட்சியை­விட்டு பலர் விலகி காங்­கி­ரஸ் மற்­றும் ஜனதா தளம்(எஸ்) கட்­சி­யில் சேர்ந்து வரு­கின்­ற­னர்.

வேட்­பா­ளர் பட்­டி­யல் வெளி­யா­வ­தற்கு முன்பே பா.ஜன­தாவை சேர்ந்த எம்.எல்.சி.க்கள் புட்­டண்ணா, பாபு­ராவ் சின்­ச­ன­சூர், என்.ஒய்.கோபா­ல­கி­ருஷ்ணா எம்.எல்.ஏ. ஆகி­யோர் கட்­சி­யி­லி­ருந்து விலகி காங்­கி­ர­சில் சேர்ந்­த­னர்.

பாஜக வேட்­பா­ளர் பட்­டி­யல் வெளி­யானதும் வாய்ப்பு கிடைக்­கா­த­தால் அமைச்­சர் எஸ்.அங்­கார், எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.குமா­ர­சாமி, நேரு ஒலே­கர், கூளி­கட்டி சேகர் உள்­ளிட்­டோர் பத­வி வில கினர். பா.ஜனதா மூத்த தலை­வர் ஈசு­வ­ரப்பா தேர்­தல், அர­சி­ய­லில் இருந்து வில­கு­வ­தாக ஏற்கெ­ன வே அறி­வித்­து­விட்­டார்.

வாய்ப்பு கிடைக்­காத முன்­னாள் முதல்­வர் ஜெக­தீஷ் ஷெட்­டர் தனித்து போட்­டி­யி­டு­வ­தாக அறி­விப்பு வெளியிட்டுள்ளார்.

இத­னால் அந்த தொகு­திக்கு பா.ஜனதா இன்­னும் வேட்­பா­ளரை அறி­விக்­க­வில்லை. இந்த நிலை­யில் அதி­ருப்­தி­யா­ளர்­களை சமா­தா­னப்­ப­டுத்­தும் முயற்சியில் கர்நாடகா கட்சித் தலைமை இறங்­கி­யுள்­ளது. இதற்­காக கர்­நா­டக பா.ஜனதா மேலிட பொறுப்­பா­ளர் அருண்­சிங், தேர்­தல் பொறுப்­பா­ள­ரான மத்­திய அமைச்­சர் தர்­மேந்­திர பிர­தான், முதல்­வர் பச­வ­ராஜ், முன்­னாள் முதல்வர் எடி­யூரப்பா ஆகி­யோர் தீவிர முயற்சி யில் ஈடுபட்டுள்ளனர்.