பள்ளத்தாக்கில் உருண்ட பேருந்து; 13 பேர் பலி

பள்ளத்தாக்கில் உருண்ட பேருந்து; 13 பேர் பலி

1 mins read
d85f8af7-0e1f-45ba-a562-0760239f006f
-

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வின் ராய்­காட் மாவட்­டத்­தில் நிகழ்ந்த பேருந்து விபத்­தில் 13 பேர் கொல் லப்பட்டனர். 25க்கும் மேற்­பட்­டோர் காயம் அடைந்­த­னர். நேற்று அதி­காலை 4.30 மணி­ய­ள­வில் புனே-மும்பை நெடுஞ்­சா­லை­யில் ஷிங்­ரோபா கோயில் அருகே பேருந்து விபத்தில் சிக்கியது. ஓட்­டு­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்து பள்­ளத்­தாக்கை நோக்கி பேருந்து சரிந்­தது. இதில் இசைக் குழு­வைச் சேர்ந்த 41 பேர் பய­ணம் செய்­த­னர்.

"காபோலி பகு­தி­யில் பேருந்து பள்­ளத்­தாக்­கில் விழுந்­த­தில் ஏழு பேர் மாண்­ட­னர். 25க்கும் மேற்­பட்­டோர் காயம் அடைந்­த­னர். மீட்­புப் பணி­கள் துரிதமாக நடை­பெற்று வரு­கின்­றன," என்று நேற்று காலை ராய்­காட் காவல் அதி­காரி சோம்­நாத் கார்கே இந்­தியா டுடே­வுக்கு அளித்த பேட்­டி­ யில் தெரி­வித்­தார்.

சம்­ப­வத்­துக்­குப் பிறகு பலி எண்­ணிக்கை 13க்கு அதி­க­ரித்­தது.

உள்­துறை அமைச்­சர் அமித் ஷா, "இந்த துர­திர்ஷ்­ட­மான விபத்து குறித்து முதல்­வர் ஏக்­நாத் ஷிண்­டே­யி­டம் பேசி­னேன். உள்­ளூர் நிர்­வா­கி­கள் மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்," என்று தமது டுவிட்­டர் பதி­வில் தெரிவித்து இருந்தார்.

"விபத்­தில் உயி­ரி­ழந்த குடும்­பத்­தி­ன­ருக்கு எனது ஆழ்ந்த இரங்­க­லைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்," என்­றும் அமித் ஷா குறிப்­பிட்­டி­ருந்­தார்.

பேருந்­தில் பய­ணம் செய்த வர்­கள் மும்­பை­யில் உள்ள சியோன் மற்­றும் கோரே­கான் பகு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். விபத்­தில் இறந்­த­வர்­களும் காயம் அடைந்­த­வர்­களும் 18 வயது முதல் 25 வய­துக்கு உட்­பட்ட வர்­கள் எனத் தெரி­கிறது. விபத்து குறித்து கோபோலி காவல்­துறை விசா­ரித்து வரு­கிறது.