மின்தூக்கியில் பாலியல் தொந்தரவு; வாலிபர் கைது

மின்தூக்கியில் பாலியல் தொந்தரவு; வாலிபர் கைது

1 mins read
3eba561e-d0ac-435f-82d0-3712ed0d5cb7
-

புது­டெல்லி: டெல்­லி­யில் ஜசோலா மெட்ரோ ரயில் நிலைய மின் தூக்­கி­யில் சென்ற பெண்­ணி­டம் பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்த வாலி­பர் கைதா­கி­யுள்­ளார்.

ராஜேஷ் குமார், வயது 26, என்ற அந்த நபர் தனி­யார் மருத்­துவமனை­யில் துப்­பு­ரவு பணி­யா­ள­ராக வேலை பார்க்­கி­றார் என்­பது விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ளது. கடந்த 4ஆம் தேதி மெட்ரோ ரயி­லில் ஏற வந்த ராஜேஷ் குமார், மின்தூக்கியில் பெண் தனி­யாக இருப்­ப­தைப் பார்த்து தவறான செய்கை காட்டி, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதற்கு பெண் எதிர்ப்பு தெரி­வித்ததால் அவர் ரயிலில் செல்லாமல் வெளி­யேறி விட்டார். கண்காணிப்புக் கேம ராவை ஆராய்ந்து அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.