பிறந்தநாள் நிகழ்வு: காதலியைக் கழுத்தறுத்து கொன்ற காதலன்

பிறந்தநாள் நிகழ்வு: காதலியைக் கழுத்தறுத்து கொன்ற காதலன்

1 mins read
2fa64d94-a1a4-4c57-8b6f-c18474b1ee27
-

பெங்­க­ளூரு: காத­லி­யின் பிறந்­த­நாள் கொண்­டாட்­டத்­தின்­போது அவ­ருக்குக் கேக் ஊட்­டி­விட்ட காத­லன், திடீ­ரென கழுத்தை அறுத்து அப்­பெண்­ணைக் கொலை செய்­தான்.

காத­லி­யின் பெற்­றோ­ரது கண்­முன்னே இந்­தக் கொடூ­ரம் அரங்­கேறி உள்­ளது. காத­லன் கைது செய்­யப்­பட்­டுள்­ளான்.

பெங்­க­ளூ­ருவைச் சேர்ந்த 24 வய­தான நவ்யா காவல்­து­றை­யில் பணி­யாற்றி வந்­தார். அவ­ரும் பிர­சாந்த் என்ற இளை­ய­ரும் ஆறு ஆண்­டு­க­ளா­கக் காத­லித்து வந்­த­னர். இரு­வ­ரது குடும்­பத்­தா­ரும் நண்­பர்­கள் என்­ப­தால் காத­லுக்கு எதிர்ப்பு கிளம்­பாது என இரு­வ­ரும் நம்­பி­னர்.

இந்­நி­லை­யில் நவ்யா அண்­மைக்­கா­ல­மாக இன்­னொரு இளை­ய­ரு­டன் ரக­சி­ய­மா­கப் பேசி வந்­த­தா­க­வும் அத­னால் பிர­சாந்த் ஆவே­சம் அடைந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. கடந்த 14ஆம் தேதி நவ்­யா­வின் குடும்­பத்­தார் அவ­ரது பிறந்­த­நாளைக் கொண்­டா­டி­ய­போது பிர­சாந்­துக்­கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

அந்­நி­கழ்­வின்­போது நவ்யா­வுக்கு கேக் ஊட்­டி­விட்­டார் பிர­சாந்த். ஆனால் அப்­போது சற்­றும் எதிர்­பா­ரா­த­வி­த­மாக தன்­னி­டம் இருந்த கத்­தி­யைக் கொண்டு நவ்­யா­வின் கழுத்தை அறுத்­தார். இதை­ய­டுத்து ரத்­தம் பீறிட்ட நிலை­யில், கீழே விழுந்த நவ்யா ரத்த வெள்­ளத்­தில் உயி­ருக்­குப் போரா­டி­னார்.

அவ­ரது பெற்­றோர் கண்­முன்னே இக்கொடூ­ரத்தை அரங்­கேற்­றி­னார் பிர­சாந்த். மருத்­து­வ­மனைக்கு கொண்டு செல்­லப்­பட்ட நவ்யா, முன்பே இறந்­து­விட்­ட­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.