ஆற்றில் கவிழ்ந்த டிராக்டர்: 11 பேர் உயிரிழப்பு

ஆற்றில் கவிழ்ந்த டிராக்டர்: 11 பேர் உயிரிழப்பு

1 mins read
9048f753-1fa6-4a00-a830-ca692f614ca9
-

லக்னோ: உத்­த­ரப் பிர­தே­சத்­தில் டிராக்­டர் வாக­னம் ஆற்­றில் கவிழ்ந்த விபத்­தில் 11 பேர் உயி­ரி­ழந்­த­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் நிகழ்ந்­துள்­ளது.

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தின் அஜ்­மத்­பூர் என்ற பகு­தி­யைச் சேர்ந்த பொது­மக்­கள் தங்­கள் ஊரில் இருந்து தின­மும் சில கிலோ­மீட்­டர்­கள் தூரம் சென்று கர்ரா ஆற்­றில் நீர் எடுத்­துக்கொண்டு வீடு திரும்­பு­வது வழக்­கம். அந்த வகை­யில், சனிக்­கி­ழ­மை­யன்று தண்­ணீர் எடுப்­ப­தற்­காக பலர் டிராக்­ட­ரில் சென்றுகொண்­டி­ருந்­த­னர்.

ஷாஜ­ஹான்­பூர் பகு­தி­யில் உள்ள பாலத்­தின் மீது டிராக்­டர் சென்­ற­போது, எதிர்­பா­ரா­த­வி­த­மாக அது ஓட்­டு­ந­ரின் கட்­டுப்­பாட்டை இழந்து தாறு­மா­றாக ஓடத் தொடங்­கி­யது. பின்­னர் பாலத்தை ஒட்­டி­யுள்ள ஆற்­றில் அது கவிழ்ந்­தது.

டிராக்­ட­ரில் சென்­ற­வர்­கள் உயி­ருக்­குப் போரா­டிய நிலை­யில், விபத்து குறித்து தக­வல் அறிந்த காவல்­து­றை­யி­ன­ரும் தீய­ணைப்­புத் துறை­யி­ன­ரும் விரைந்து வந்து மீட்­புப் பணி­களில் ஈடுபட்டனர். விபத்­தில் எட்டு சிறு­வர்­கள், இரண்டு பெண்­கள் உட்­பட 11 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். 24 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர்.