கொளுத்தும் வெயிலில் நிகழ்ச்சி; வெப்பம் தாங்காமல் 11 பேர் பலி

கொளுத்தும் வெயிலில் நிகழ்ச்சி; வெப்பம் தாங்காமல் 11 பேர் பலி

1 mins read
3e789422-e4bb-4226-b0f0-6c3b27f8017e
-

மும்பை: விருது விழா­விற்கு வந்­தி­ருந்த பார்­வை­யா­ளர்­களில் 11 பேர் வெயில் தாங்­கா­மல் மாண்டு­போன சம்­ப­வம் இந்­தி­யா­வின் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் ஞாயிற்­றுக்­கி­ழமை நிகழ்ந்­தது.

ஆன்­மி­கத் தலை­வ­ரும் சமூக ஆர்­வ­ல­ரு­மான அப்­பா­சா­கிப் தர்­மா­தி­கா­ரிக்கு 'மராட்­டிய பூஷண்' விருது வழங்­கப்­பட்­டது. மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா, மாநில முதல்­வர் ஏக்­நாத் ஷிண்டே, துணை முதல்­வர் தேவேந்­திர ஃபட்­னா­விஸ் உள்­ளிட்­டோர் விழா­வில் பங்­கேற்­றனர்.

பெருந்­தி­ட­லில் காலை முதலே ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் திரண்­ட­போ­தும் முற்­ப­கல் 11.30 மணிக்­குத் தான் நிகழ்ச்சி தொடங்­கி­யது. கிட்­டத்­தட்ட 38 டிகிரி செல்­சி­யஸ் வெயில் அடித்­த­தால் வெப்­பம் தாங்­கா­மல் பல­ரும் மயங்கி விழுந்­த­னர்.

பலர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்ட நிலை­யில் 11 பேர் உயி­ரி­ழந்­த­னர். இன்­னும் பலர் சிகிச்சை பெற்று வரு­வ­தால் உயி­ரி­ழப்பு கூட­லாம் என அஞ்­சப்­ப­டு­கிறது.

மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­வோ­ரைச் சந்­தித்த முதல்­வர் ஷிண்டே, மாண்­டோ­ரின் குடும்­பத்­தார்க்­குத் தலா ரூ.5 லட்­சம் இழப்­பீடு வழங்­கப்­படும் என அறி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், நிகழ்ச்­சியை முறை­யா­கத் திட்­ட­மிட்டு நடத்­த­வில்லை எனச் சாடிய முன்­னாள் முதல்­வர் உத்­தவ் தாக்­கரே, சம்­ப­வம் குறித்து விசா­ரிக்­கப்­போ­வது யார் என்­றும் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

வானிலை மையம் எச்­ச­ரிக்கை

இத­னி­டையே, மேற்கு வங்­கம், பீகார், ஆந்­திரா, பஞ்­சாப், ஹரி­யானா ஆகிய மாநி­லங்­களில் அடுத்த சில நாள்­க­ளுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்­திய வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து, மேற்கு வங்க மாநி­லத்­தில் இவ்­வா­ரம் முழு­வ­தும் பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.