'கண்டவரே கொலையாளி': ராணுவ வீரர் கைது

'கண்டவரே கொலையாளி': ராணுவ வீரர் கைது

1 mins read
dd3556a9-cf36-49eb-8299-5f7e408ff013
-

சண்­டி­கர்: பஞ்­சாப் மாநி­லத்­தி­ல் உள்ள பதிண்டா ராணுவ முகா­மில் இம்­மா­தம் 12ஆம் தேதி நான்கு வீரர்­க­ளைச் சுட்­டுக்­கொன்­ற­தன் தொடர்­பில் ராணுவ வீரர் ஒரு­வ­ரைக் காவல்­துறை கைது­செய்­துள்­ளது.

முன்­ன­தாக, வீரர்­கள் கொல்­லப்­பட்ட பாச­றை­யி­லி­ருந்து இரு­வர் வெளி­யே­றி­ய­தைத் தான் கண்­ட­தாக தேசாய் மோகன் என்ற அந்த ராணுவ வீரர், மேஜர் அசு­தோஷ் சுக்­லா­வி­டம் கூறி­ இருந்­தார். முக­மூடி அணிந்த இரு­வர் காட்­டுப் பகு­திக்­குள் தப்­பி­யோ­டி­ய­தா­க­வும் அவர் சொன்­னார்.

இந்­நி­லை­யில், அந்­நான்கு வீரர்­களும் தம்­மைத் துன்­பு­றுத்தி வந்­த­தால் அவர்­க­ளைச் சுட்­டுக்­கொன்றுவிட்­ட­தைக் காவல்­துறை விசா­ர­ணை­யின்போது தேசாய் மோகன் ஒப்­புக்­கொண்­ட­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

தேசாய் மோகன் கைது­செய்­யப்­பட்­டுள்­ளதை உறு­திப்­ப­டுத்­திய பதிண்டா மூத்த காவல்­து­றைக் கண்­கா­ணிப்­பா­ளர் குல்­னீத் சிங் குரானா, அதே நேரத்­தில் மேல்­வி­வ­ரங்­களை வெளி­யிட மறுத்­து­ விட்­டார்.

சுட்­டுக்­கொல்­லப்­பட்ட நால்­வ­ரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கம­லேஷ், யோகேஷ்­கு­மார் என்ற இருவரும் அடங்குவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.