இந்தியாவில் 'ஆப்பிள்' வருவாய் ரூ.49,100 கோடியாக உயர்ந்தது

இந்தியாவில் 'ஆப்பிள்' வருவாய் ரூ.49,100 கோடியாக உயர்ந்தது

1 mins read
943615f7-2095-43c5-a254-4ecd43c4eeeb
-

புது­டெல்லி: கடந்த மார்ச் மாதத்­து­டன் முடிந்த நிதி­யாண்­டில் இந்­தி­யா­வில் 'ஆப்­பிள்' நிறு­வ­னம் ரூ.49,100 கோடி (S$8 பில்­லி­யன்) வரு­வாய் ஈட்­டி­யது.

இது அதற்கு முந்­திய நிதி­ ஆண்­டை­விட கிட்­டத்­தட்ட 50% அதி­கம். கடந்த 2021-22ஆம் ஆண்­டில் இந்­தி­யா­வில் ஆப்­பிள் நிறு­வ­னம் ரூ.33,500 கோடி வரு­வாய் ஈட்­டி­யி­ருந்­தது.

இந்­தி­யா­வில் 700 மில்­லி­யன் பேர் திறன்­பே­சிப் பய­னா­ளர்­கள் உள்ள நிலை­யில், அவர்­களில் நான்கு விழுக்­காட்­டி­னர் மட்­டுமே ஐஃபோன் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இத­னை­ய­டுத்து, இந்­தி­யா­வில் வலு­வா­கக் காலூன்ற 'ஆப்­பிள்' இலக்கு கொண்­டுள்­ளது.

அவ்­வ­கை­யில், ஆப்­பிள் நிறு­வ­னம் இந்­தி­யா­வில் தனது முத­லா­வது நேரடி விற்­பனை நிலை­யத்தை இன்று திறக்­க­வுள்ளது. மும்­பை­யில் ஒரு வணிக வட்­டா­ரத்­தில் அந்­நி­லை­யம் அமைந்­துள்­ளது. இரு­நாள்­க­ளுக்­குப் பிறகு தலை­ந­கர் புது­டெல்­லி­யில் 'ஆப்­பிள்' நிலை­யம் திறக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­கழ்­வு­க­ளுக்­காக அந்­நி­று­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி டிம் குக் இந்­தியா சென்­றுள்­ளார்.