மகனுடன் பேசிக்கொண்டு இருந்தபோது இந்தியருக்கு நேர்ந்த கதி

மகனுடன் பேசிக்கொண்டு இருந்தபோது இந்தியருக்கு நேர்ந்த கதி

1 mins read
474f6ba0-c741-43e0-a3fe-2178bc55a85f
-

சூடான்: கனடாவிலுள்ள தம் மகனுடன் கைப்பேசி வழியாக பேசிக்கொண்டிருந்தபோது, குறிதவறி வந்த குண்டு பாய்ந்து இந்தியர் ஒருவர் மாண்ட சம்பவம் ஆப்பிரிக்க நாடான சூடானில் நிகழ்ந்தது. அந்த நாட்டில் ராணுவத்தினர்க்கும் துணை ராணுவத்தினர்க்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டுவிட்டனர். இந்நிலையில், கடந்த சனிக் கிழமை சூடான் தலை நகர் கார்ட்டூமில் உள்ள தமது குடியிருப்பில் இருந்தபடி, கனடாவிலுள்ள தம் மகனுடன் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார் கேரளாவைச் சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின், 48, அப்போது எங்கிருந்தோ வந்த குண்டு அவரது உடலைத் துளைத்தது. ஆல்பர்ட்டின் மனைவியும் மகளும் இரு வாரங்களுக்கு முன்னர்தான் சூடான் சென்றனர் என்றும் இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் ஊருக்குத் திரும்ப இருந்தனர் என்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவித்தது.