நாக்பூர்: ஓடு தளத்தில் தரையிறங்கியபோது தனியார் நிறுவன விமானத்தின் வால்பகுதி தரையில் மோதியதால் நாக்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
எனினும் இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று மும்பைக்கும் நாக்பூருக்கும் இடையே இயக்கப்பட்டது. எந்தச் சிக்கலும் இன்றி நாக்பூர் வரை சென்ற அந்த விமானத்தை விமானி தரையிறக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் வால் பகுதி ஓடுதளத்தில் மோதியது.
இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்தது.
அக்குறிப்பி்ட்ட விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் ஏதேனும் பழுதுகள் இருப்பின் அவை சரிசெய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

