நுழைவுச்சீட்டுகள் பதுக்கப்படுவதாக ரசிகர்கள் கொந்தளிப்பு

நுழைவுச்சீட்டுகள் பதுக்கப்படுவதாக ரசிகர்கள் கொந்தளிப்பு

1 mins read
4292c4b9-9f9a-4e00-997a-87c4342c6130
-

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளை ரசிகர்களுக்கு விற்காமல் சென்னை சிஎஸ்கே அணி நிர்வாகம் பதுக்குவதாக ரசிகர்கள் சாடி உள்ளனர்.

நுழைவுச்சீட்டுகளை விற்கும் இணையத்தளத்தில் அவை விற்பனைக்கு வந்த பத்து நிமிடங்களுக்குள் அனைத்தும் விற்றுத் தீர்ந்த தாகத் தகவல் வருகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

எத்தனை நுழைவுச்சீட்டு கள் இணையத் தளம் மூலம் விற்கப்பட்டன என்ற தக வலை சிஎஸ்கே நிர்வாகம் தெரிவிக்க மறுப்பதாகவும் ரசிகர்கள் சாடியுள்ளதாக ஊடகச் செய்தி கூறுகிறது.