ராகுலின் மனு நிராகரிப்பு

ராகுலின் மனு நிராகரிப்பு

1 mins read
f203b27e-4887-485a-adf5-9875845b120c
-

சூரத்: இந்­தி­யா­வின் எதிர்க்­கட்­சித் தலை­வர்­களில் ஒரு­வ­ரான ராகுல் காந்தி, தனக்கு விதிக்­கப்­பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்­ட­னையை எதிர்த்து மேல் முறை­யீடு செய்த மனுவை சூரத் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­து­விட்­டது.

இத­னால் அவ­ருக்கு விதிக்­கப்­பட்ட சிறைத் தண்­ட­னை­யும் எம்.பி. பதவி ரத்­தும் தொடர்ந்து நீடிக்­கிறது. கடந்த நாடா­ளு­மன்றத் தேர்­த­லின்­போது கர்­நா­டகா மாநி­லத்­தில் உள்ள கோலா­ரில் மோடி என்ற பெய­ரைக் குறிப்­பிட்டு அவ­தூ­றா­கப் பேசி­ய­தாக குஜ­ராத் மாநில முன்­னாள் அமைச் ­ச­ரும் பாஜக எம்.எல்.ஏ.வுமான புர்­னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­தில் அவ­தூறு வழக்­குத் தொடுத்­தார்.

இந்த வழக்­கில் ராகுல் குற்­ற­வாளி என்­றும் இரண்டு ஆண்டு சிறை தண்­டனை விதித்­தும் நீதி­பதி எச்.எச்.வர்மா, கடந்த மாதம் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்­கி­னார்.

இதை­ய­டுத்து ராகுல் காந்­தி­யின் எம்.பி. பத­வியைத் தேர்­தல் ஆணை­யம் பறித்­தது.

இந்த நிலை­யில் தண்­ட­னையை நிறுத்தி வைக்­கக்­கோரி ராகுல் காந்தி கடந்த 3ஆம் தேதி சூரத் மாவட்ட நீதி­மன்­றத்­தில் நேரில் முன்­னி­லை­யாகி மேல் ­முறை­யீடு செய்­தார். ஆனால் ராகுல் காந்­தி­யின் மனுவை சூரத் நீதி­மன்­றம் தள்­ளு­படி செய்­தது.

இந்த வழக்­கில் இடைக்­காலத் தடை கிடைத்­தி­ருந்­தால் ராகுல் காந்தி மீண்­டும் எம்.பி.யாவ­தற்கு வாய்ப்பு இருந்­தி­ருக்­கும்.

இந்த நிலை­யில் அவ­ரது மேல்­மு­றை­யீடு தள்­ளு­படி செய்­யப் பட்­டுள்­ளது.