தீ விபத்து; ஒரு மணி நேரத்தில் 50 மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

தீ விபத்து; ஒரு மணி நேரத்தில் 50 மின்சார மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்

1 mins read
abcd22bd-2656-435f-be4d-611327fd0bb3
-

திருப்­பதி: ஆந்­திரா மாநி­லத்­தில் ஸ்ரீகா­கு­ளம் மாவட்­டத்­தில் நிகழ்ந்த தீ விபத்­தில் காட்­சிக் கூடத்­தில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட மின்­சார மோட்­டார் சைக்­கிள்­கள் எரிந்து நாச­மா­யின.

பலசா-கஷி­பு­கா­வில் உள்ள பக­வதி தியேட்­டர் சாலை­யில் உள்ள காட்­சிக் கூடத்­தில் விற்­ப­னைக்­காக மோட்­டார் சைக்­கிள் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

புதன்­கி­ழமை இரவு ஊழி­யர் ஒரு­வர் மின்­சார மோட்­டார் சைக்­கி­ளுக்கு மின்­னேற்­றிக் கொண்­டி­ருந்­தார். அப்­போது மின்­க­லன் திடீ­ரென வெடித்து சித­றி­யது.

இத­னால் காட்­சிக்­கூ­டத்தில் தீ மூண்டது. அங்­கி­ருந்த ஊழி­யர்­கள் அதிர்ச்­சி­ய­டைந்து வெளியே ஓடி­னர்.

இது குறித்து அறிந்த ஸ்ரீகா­கு­ளம் தீய­ணைப்பு துறை, காவல்­து­றை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஆனால் தீ அதற்­குள் அரு­கில் இருந்த ஹார்ட்­வேர் கடை மற்­றும் மது­பா­னக் கடைக்கு பரவி எரிந்­தது. தீ அணைப்­பா­ளர்­கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்­டுக்­குள் கொண்டு வந்­த­னர்.

இருப்­பி­னும் ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட மோட்­டார் சைக்­கிள்­கள் எரிந்து விட்­ட­தாக அந்த காட்­சிக் கூடத்­தின் உரி­மை­யா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

அவற்­றின் மதிப்பு 50 லட்ச ரூபாய் எனக் கூறப்­ப­டு­கிறது. காவல்­து­றை­யி­னர் தீ விபத்­து குறித்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.