கழிவறை வாளியில் வீசப்பட்ட குழந்தை உயிரோடு மீட்பு

கழிவறை வாளியில் வீசப்பட்ட குழந்தை உயிரோடு மீட்பு

1 mins read
77e6cc1e-3a86-4cd5-803b-89c577209e6f
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­வில் கழி­வ­றை­யில் உள்ள வாளிக்­குள் போடப்­பட்ட பச்­சி­ளம் குழந்­தையை அதி­கா­ரி­கள் உயி­ரோடு மீட்டு உள்­ள­னர்.

பத்­தி­னம்­திட்டா மாவட்­டம் கோட்டா பகு­தியைச் சேர்ந்த இளம்­பெண் ஒரு­வ­ருக்குச் சில நாட்­க­ளுக்கு முன்பு குழந்தை பிறந்­தது.

வீட்­டி­லேயே குழந்­தையை பெற்ற அந்தப் பெண்­ணுக்கு ரத்த போக்கு அதி­க­மாக இருந்­த­தால் அரு­கில் உள்ள மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றார்.

அப்­போது தனக்­குப் பிறந்த குழந்தை இறந்து விட்­ட­தா­க­வும், இப்­போது ரத்­தப் போக்கு அதி­க­மாக இருந்­த­தால் மருத்­துவ மனைக்கு வந்­த­தா­க­வும் கூறி­னார்.

ஆனால் பெண்­ணு­டன் வந்த அவ­ரது மூத்த மகன், தாயாருக்குப் பிறந்த குழந்தை கழி­வ­றை­யில் வீசப்­பட்­ட­தாக மருத்­து­வர்­க­ளி­டம் கூறி அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­னார்.

இதை­ய­டுத்து மருத்­து­வர்­கள், குழந்­தை­கள் நல அலு­வ­ல­ருக்­கும், காவல்­து­றைக்­கும் தக­வல் கொடுத்­த­னர்.

உடனே காவல்­து­றை­யி­னர் சம்­பவ இடத்­திற்கு விரைந்­த­னர்.

அப்­போது பெண்­ணின் வீட்டு கழி­வ­றை­யில் ஒரு வாளிக்­குள் குழந்தை அழுது கொண்­டி­ருந்­தது.

அதி­கா­ரி­கள் வாளி­யோடு குழந்­தையை மருத்­து­வ­ம­னைக்கு எடுத்­துச் சென்­ற­தா­கக் கூறப் படு­கிறது.

அந்தக் குழந்­தைக்கு தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­ட­தால் உயிர் பிழைத்­தது.

இதை­ய­டுத்து அந்த குழந்­தையை ஒரு தன்­னார்வ தொண்டு நிறு­வ­னம் தத்து எடுத்­துக்­கொண்­டது. இதற்­கி­டையே கேரள சுகா­தார அமைச்­சர் வீணா ஜார்ஜ், "பிறந்த சில நிமி­டங்­களில் தாயா­ரால் கைவி­டப்­பட்ட குழந்­தை­யைப் போராடி மீட்டு உயிர் பிழைக்க வைத்த மருத்­து­வர்­க­ளை­யும் காவல்­து­றை­யி­ன­ரை­யும் பாராட்­டு­கி­றேன் என்று சமூக ஊட­கத்­தில் வெளி­யி­டப்­பட்ட கருத்­துப் பதி­வில் குறிப்­பிட்டு உள்­ளார். இச்சம்பவத்தைக் காவல்துறை விசாரித்து வரு கிறது.