இந்தியாவைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

இந்தியாவைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை

1 mins read
2559cdc9-3792-45ca-8b7a-4f2b081db586
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த திரு வீரா கொல்லப்பட்டார். படம்: gofundme.com -

அமராவதி: அமெரிக்காவில் முதுநிலைப் பட்டக் கல்வி பயின்றுவந்த இந்திய மாணவர் ஒருவர் ஒஹாயோ மாநிலத்தில் சட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது சாயீஷ் வீரா, கொலம்பஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் மாண்ட மாணவரின் குடும்பத்துக்குத் தகவல் தரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியது.

10 நாள்களில் திரு வீராவின் பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது.

திரு வீராவின் உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்காக நிதி திரட்டும் முயற்சியைக் கவனிக்கும் ரோகித் யலமான்சிலி என்பவர் இதைத் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட பெட்ரோல் நிலையத்தில்தான் திரு வீரா வேலை செய்துவந்ததாகவும் அவர் சொன்னார்.

கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரின் படத்தைக் காவல்துறையினர் பகிர்ந்துள்ளனர்.

சந்தேக நபர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காணொளியில் காணப்பட்டார்.