விமானி அறையில் தோழி; ஏர் இந்தியா விசாரணை

2 mins read
64d82b6a-fce2-4121-8035-cc94dd079800
-

புது­டெல்லி: பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்­தின் விமானி அறைக்­குள் தோழியை அனு­ம­தித்த ஏர் இந்தியா விமா­னியை நிர்­வா­கம் விசா­ரித்து வரு­கிறது.

சென்ற பிப்­ர­வரி 27ஆம் தேதி துபா­யி­லி­ருந்து டெல்லி நோக்­கிச் சென்ற விமா­னத்­தில் இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது.

இது குறித்து விமா­னத்­தில் பய­ணம் செய்த ஒரு­வர், விமான நிறு­வ­னத்­தி­ட­மும் 'டிஜி­சிஏ' எனும் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­கு­ந­ர­கத்­தி­ட­மும் புகார் அளித்துள்ளார். இதை­ய­டுத்து விசா­ரணை தொடங்­கி­யது.

விமா­னப் போக்­கு­வ­ரத்து ஒழுங்­கு­முறை அமைப்­பான டிஜி­சிஏ, வெள்­ளிக்­கி­ழமை விமா­னியையும் விசா­ர­ணைக்கு அழைத்­தி­ருந்­தது.

தனது தோழிக்கு வர­வேற்பு அறை போன்ற அனு­ப­வத்தை வழங்க விமானி விரும்­பி­ய­தா­க­வும் தலை­யணை, சிறப்பு உணவு, மது­பா­னம் போன்­ற­வற்றை தோழிக்­காக விமானி பெற்­றுத் தந்­த­தா­க­வும் புகா­ரில் பயணி கூறி­யுள்­ளார்.

"விமானி அறை­யில் முதன்மை கண்­கா­ணிப்­பா­ளர் இருக்­கை­யில் தோழி ஒரு மணி நேரத்­துக்கு மேல் அமர்ந்து இருந்­தார். ஏர் இந்­தியா விமா­னம் 'AI915' விமா­னத்­தின் விமா­னி­கள் தாம­த­மாக வந்து பய­ணி­க­ளு­டன் ஏறி­னர்," என்று அவர் குறிப்­பிட்டு இருந்­தார்.

"சாதா­ரண வகுப்­பில் பய­ணம் செய்த தோழியை வர்த்­த­கப் பிரி­வுக்கு மாற்ற விமானி விரும்­பி­னார். ஆனால் வர்த்­த­கப் பிரிவு நிரம்­பி­யி­ருந்­தது. இருந்தாலும் வர்த்­த­கப் பிரி­வில் வழங்­கப்­படும் சிறப்பு உணவு உள்­ளிட்ட சேவை­களை தோழிக்கு வழங்க விமானி ஏற்­பாடு செய்­த­ார்," என்­று பயணி தெரி­வித்­தி­ருந்­தார்,

இச்­சம்­ப­வத்தை விசா­ரித்து வரும் டிஜி­சிஏ, "இது, விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­கு­ந­ரக பாது­காப்பு விதி­மு­றை­களை மீறும் செய­லா­கும். உண்மை நிலையை ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்று தெரி­வித்­தது.

ஏர்­ இந்­தியா பேச்­சா­ளர் ஒரு­வர், டிஜி­சிஏ விசா­ர­ணை­யில் முழு ஒத்­து­ழைப்பு வழங்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் இத்­த­கைய பாது­காப்பு விதி­மீ­றல்­களை பொறுத்­துக் கொள்ள முடி­யாது என்­றும் விமானி மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.