புதுடெல்லி: சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளிடையே மோதல் ஏற் பட்டுள்ளதால் நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
இந்த மோதலில் அப்பாவி மக்களும் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் சூடானின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு பல்வேறு முயற்சி களை எடுத்து வருகிறது.
சூடான் நிலவரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தூதரக அதிகாரிகள், விமானப்படை தளபதி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் இந்தியர்களை துரிதமாக மீட்கும் திட்டங்களைத் தயாரிப்பது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். சூடானின் தற்போதைய சூழல் குறித்து ஆய்வு செய்த பிரதமர், சூடானில் உள்ள 3,000க்கும் மேற்பட்ட இந்தியர் களுக்கு அனைத்து உதவி களையும் வழங்க வேண்டும் உத்தரவிட்டார்.

