புதுடெல்லி: பிரதமர் மோடி தமது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைதி, சகோதரத்துவம், மனிதநேயம் மற்றும் அன்பு பற்றிய செய்தியை இந்த ரம்ஜான் தினம் அனை வருக்கும் கொண்டு சேர்க்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் திரவுபதி மர்முவும் இஸ்லாமியர் களுக்கு நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டு உள்ளார்.
"இந்தப் பண்டிகை அன்பு, இரக்கம் மற்றும் பாசம் போன்ற உணர்வுகளைப் பரப்புகிறது. சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த ரம்ஜான் திருநாளில் உறுதி எடுப்போம் என்று அதிபர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

