இறுதிக் கட்டத்தில் கர்நாடகா தேர்தல்

இறுதிக் கட்டத்தில் கர்நாடகா தேர்தல்

2 mins read
8e791bc2-0428-45e8-bf08-eef75ab2232c
-

பெங்­க­ளூரு: கர்­நா­டா­கா­வில் வேட்பு மனு பரி­சீ­லனை முடிந்­துள்­ள­தால் தேர்­தல் களம் சூடு­பி­டித்­துள்­ளது.

இந்தத் தேர்­த­லில் பா.ஜனதா கட்சி 224 தொகு­தி­க­ளி­லும் காங்­கி­ரஸ் 223 தொகு­தி­க­ளி­லும் ஜனதா­த­ளம்(எஸ்) 211 தொகு­தி­களிலும் போட்­டி­யி­டு­கின்றன.

கர்­நா­டகா சட்­ட­சபை தேர்­ தலுக்­கான வேட்பு மனுத் தாக்­கல் வியா­ழக்­கி­ழமை முடி­வ­டைந்­தது. இதை­ய­டுத்து வேட்பு மனுக்­கள் பரி­சீ­லிக்­கப்­பட்­டன.

ஒட்­டு­மொத்­த­மாக 3,632 பேர் வேட்பு மனுக்­களைத் தாக்­கல் செய்­தி­ருந்­த­னர். அதா­வது 3,632 பேரும் 5,102 மனுக்­களைத் தாக்கல் செய்­திருந்தனர்.

இந்த நிலை­யில் கன­க­புரா தொகுதியில் போட்டியிடும் காங்­கிரஸ் வேட்­பா­ள­ரும் மாநிலத் தலை­வ­ரு­மான டி.கே.சிவக்­கு­மா­ரின் மனு நிரா­க­ரிக்­கப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் அவ­ரது வேட்பு மனுவை ஏற்­றுக்கொள்­வ­தாக தேர்­தல் அதி­கா­ரி­கள் அறி­வித்­த­னர்.

சவ­தத்தி-எல்­லம்மா, அவு­ரத், ஹாவேரி, ராய்ச்­சூர் மற்­றும் சிவாஜி­ ந­கர் ஆகிய 5 தொகு­தி­ க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்­கள் பரி­சீ­ல­னை­யில் உள்ள நிலை­யில் 3,044 வேட்­பா­ளர்­க­ளின் மனுக்­கள் ஏற்­றுக்கொள்­ளப்­பட்­டன.

இதில் ஆண் வேட்­பா­ளர்­கள் 4,607 பேரும் பெண் வேட்­பா­ளர்­கள் 381 பேரும் உள்­ள­னர். 3வது பாலின வேட்­பா­ளர் ஒரு­வர் உள்­ளார்.

இம்­மா­தம் 24ஆம் தேதிக்­குள் வேட்பு மனுக்­களை மீட்­டுக் கொள்­ள அவ­கா­சம் வழங்­கப்­பட்டுள்­ளது.

அன்று எத்­தனை வேட்­பா­ளர்­கள் தேர்­தல் களத்­தில் இருப்­பார்­கள் என்­பது உறு­தி­யாகிவிடும்.

பழனிசாமி தரப்பு

வேட்பாளர் ஏற்பு

இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகா மாநிலம் புலிகேசி தொகுதியில் அதிமுக வின் அதிகாரபூர்வ வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என அறிவித்திருந்தார்.

வேட்பு மனு பரிசீலனையில் டி. அன்பரசன் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் ஓ.பி.எஸ். தரப்பில் கோலார் தங்க வயல், புலிகேசி நகர் தொகுதிகளில் நிறுத்தப் பட்ட வேட்பாளர்களின் மனுக் களை தேர்தல் ஆணையம் நிரா கரித்துள்ளது.

வேட்பு மனு படிவத்தை வேட்பாளர்கள் முறையாகப் பூர்த்தி செய்யவில்லை என்று இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.