உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
தொற்றுக் கிருமியால் பாதிப்பு
புதுடெல்லி: நாடு முழுவதும் தொற்று அதிகரித்து வருவதால் உச்ச நீதிமன்றத்தில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பெண் நக்சலைட்டுகளை
சுட்டுக் கொன்ற காவல்துறை
புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா, சரிதா என்ற இரண்டு பெண் நக்சலைட்டு களின் தலைக்கு தலா 14 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தின் பலஹட் மாவட்டத்தில் கட்லா பகுதியில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்குப் பதிலடியாக காவல்துறையினரும் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த இந்த மோதலில் இரண்டு பெண் நக்சலைட்டுகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

