ஜம்முவில் ரோஹிங்யா அகதிகள் கைது

ஜம்முவில் ரோஹிங்யா அகதிகள் கைது

1 mins read
2e01b3d7-9f90-44c9-b700-352256eba85d
-

ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஜம்முவில் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்யா அகதிகள் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறை அதிரடிச் சோதனை நடத்தியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து அகதிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவுக்குள் எல்லை வழியாக பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக நுழைந்து வருகின்றனர்.

இவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிற்குள் நுழையும் அகதிகள் பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோதமாகக் குடியேறி புதிய அடையாளங்களை உருவாக்கி வசித்து வருகின்றனர்.

இதுபோல் ஜம்முவில் மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்யா அகதிகள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக ரகசிய தகவல் வெளியானது. இதையடுத்து நர்வல் பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரைக் கைது செய்தனர்.