60 லட்சம் முறை செலுத்தக் கூடிய தடுப்பூசிகள் கையிருப்பு: சீரம்

60 லட்சம் முறை செலுத்தக் கூடிய தடுப்பூசிகள் கையிருப்பு: சீரம்

1 mins read
f8f957bf-86bd-458b-92f4-6d89a8a05220
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா தொற்று தலை தூக்­கி­யி­ருக்­கும் நிலை­யில் அறு­பது லட்­சம் முறை போடக்­கூ­டிய கொரோனா தடுப்­பூ­சி­கள் கையி­ருப்­பில் உள்­ள­தாக சீரம் நிறு­வ­னம் அறி­வித்து உள்­ளது. கடந்த சில நாள்­க­ளாக தின­சரி கொரோனா பாதிப்பு எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.

இதை­ய­டுத்து கொரோனா கட்­டுப்­பாடு வழி­மு­றை­களைத் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும் என மாநில அர­சு­க­ளுக்கு மத்­திய சுகா­தார அமைச்சு அறி­வு­றுத்­தி­யது.

இந்த நிலை­யில் புனே­வில் தடுப்­பூ­சி ­க­ளைத் தயா­ரிக்­கும் பிர­பல சீரம் நிறு­வ­னத்­தின் தலை­மைச் செயல் அதி­கா­ரி­யான அதர் பூனா­வாலா நேற்று செய்­தி­யா­ளர்­களைச் சந்­தித்துப் பேசி­னார்.

அப்­போது, "இந்­தி­யா­வில் தற்­போது ஏற்­பட்டு வரும் கொரோனா கிருமி பர­வல் தீவி­ர­மா­னது அல்ல, இது ஒரு லேசான திரிபு மட்­டுமே. முன்­னெச்­ச­ரிக்கை நட­ வடிக்­கை­யாக வய­தா­ன­வர்­கள் பூஸ்­டர் தடுப்­பூ­சி­களை செலுத்திக் கொள்­ள­லாம்," என்­றார். "ஆனால் அதை செலுத்­திக் கொள்­ள­லாமா, வேண்­டாமா என்­பது ஒவ்­வொ­ரு­வ­ரின் தனிப்­பட்ட விருப்­பமாகும். தற்­போது எங்­க­ளி­டம் 50 முதல் 60 லட்­சம் வரை கோவோ­வேக்ஸ் தடுப்­பூ­சி­கள் கையி­ருப்­பில் உள்­ளன. அடுத்த இரண்டு அல்­லது மூன்று மாதங்­களில் இதே அளவு கொவி­ஷீல்ட் தடுப்­பூ­சி­கள் தயா­ரிக்­கப்­படும்." என்று அவர் தெரி­வித்­தார்.