அல்வார்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் சிறுநீர் கழித்துக்கோண்டிருந்தபோது ஓர் ஆடவர் மாடு முட்டி உயிரிழந்தார்.
82 வயது ஷிவ்தயால் சர்மாவுக்கு இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது.
அல்வார் நகரில் முன்னாள் ரயில்வே ஊழியரான அவர் தண்டவாளத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது ரயிலால் மோதப்பட்டு காற்றில் வீசியெறியப்பட்ட ஒரு மாடு அவரை முட்டியிருக்கிறது.
சம்பவ இடத்திலேயே திரு ஷிவ்தயால் உயிரிழந்தார்.
தண்டவாளத்தில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த வேறொரு ஆடவர் நூலிழையில் உயிர் தப்பினார்.