மும்பை: மராட்டியத்தில் பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அஜித் பவார் 40க்கும் மேற்பட்ட எம்.ஏக்களுடன் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மை அல்ல என அஜித் பவார் மறுத்தாலும் மராட்டிய அரசியலில் தொடர்ந்து பதற்றமே நீடித்து வருகிறது.
அதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு இன்னும் 3 வாரத்திற்குள் கவிழ்ந்துவிடும். மீண்டும் தேர்தல் நடைபெறும் என்று தாக்கரே ஆதரவு எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

