மீண்டும் தலைதூக்கும் செம்மரக் கட்டை கடத்தல்

மீண்டும் தலைதூக்கும் செம்மரக் கட்டை கடத்தல்

1 mins read
38463f56-334f-4a43-9912-9372ac9fa5fe
-

ஆந்­திரா: செம்­ம­ரக் கடத்­த­லில் ஈடு­பட்ட தமி­ழ­கத்­தைச் சேர்ந்த 10 பேர் உள்­பட 13 பேரை கைது செய்த போலி­சார், அவர்­க­ளி­ட­

மி­ருந்து ரூ.71 லட்­சம் மதிப்­

பி­லான செம்­ம­ரக் கட்­டை­களைப் பறி­மு­தல் செய்­த­னர்.

திருப்­பதி மாவட்ட எஸ்.பி. பர­மேஸ்­வர ரெட்டி கூறு­கை­யில், "திருப்­ப­தி­யைச் சுற்­றி­யுள்ள

பகு­தி­யில் செம்­ம­ரம் கடத்­தப்

­ப­டு­வ­தாக வந்த தக­வ­லைத் தொடர்ந்து அப்­ப­கு­தி­யில் வாகன தணிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

"அப்­போது வனப்­ப­கு­தி­யில் இருந்து வாக­னம் வெளியே வந்­தது. அந்த வாக­னத்தை மடக்­கிப் பிடித்து சோத­னை­யிட்­ட­போது அதில் செம்­ம­ரக் கட்­டை­களும் தமி­கத்­தைச் சேர்ந்த இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

"அவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தி­ய­தில் மேலும் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த பத்து பேர் வனப் பகு­தி­யில் இருப்­பது தெரி­ய­வந்­தது. அதை­ய­டுத்து அவர்­க­ளை­யும் கைது செய்­தோம். அவர்­

க­ளி­டம் இருந்து ரூ.71 லட்­சம் மதிப்பி­லான செம்­ம­ரக் கட்­டை­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. இவர்­களை வேலைக்கு அமர்த்­திய கடப்­பா­வைச் சேர்ந்த சங்­கர் மீது வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது," என்று கூறி­யுள்ளார்.