விசாகப்பட்டினத்தில் குடியேறும் ஆந்திர முதல்வர்

விசாகப்பட்டினத்தில் குடியேறும் ஆந்திர முதல்வர்

2 mins read
702f8eb3-a47e-49e6-afdd-77b939f4d61f
-

ஆந்­திரா: செப்­டம்­பர் மாதம் முதல் ஆந்­தி­ரா­வின் நிர்­வாகத் தலை

நக­ராக விசா­கப்­பட்­டி­னம் செயல்­படும் என்­றும் அங்கு தான் குடி­யே­றப்­போ­வ­தா­க­வும் ஆந்­திர முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி அறி­வித்­துள்­ளார். இத­னால் அங்கு போராட்­டம் வலுத்­துள்­ளது.

ஆந்­திர மாநிலப் பிரி­

வி­னைக்கு பின் ஆந்­தி­ரா­வில் ஆட்­சிக்கு வந்த தெலுங்கு தேசக் கட்சி விஜ­ய­வாடா அரு­கில் இருக்­கும் அம­ரா­வ­தியை ஆந்­திர மாநிலத் தலை­ந­க­ராக அறி­வித்­தது.

அத­னைத்­தொ­டர்ந்து மத்­திய அர­சின் நிதி ஒதுக்­கீட்­டு­டன் அங்கு சட்­ட­மன்­றம், தலைமைச் செய­ல­கம், அமைச்­சர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ருக்­கான குடி

யிருப்­பு­களும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

இந்­நி­லை­யில் கடந்த தேர்­

த­லில் ஆந்­தி­ரா­வில் ஆட்­சி­யைப் பிடித்த ஜெகன்­மோ­கன் ரெட்டி மாநி­லத்­தின் அனைத்துப் பகு­தி­களும் ஒரு­சேர மேம்பாடு காண வேண்­டும் என்­ப­தால் சட்­ட­மன்றத் தலை­ந­க­ராக அம­ரா­வ­தி­யும் நிர்­வாக தலை­ந­க­ராக தொழில் நக­ர­மான விசா­கப்­பட்­டி­ன­மும் நீதித்­துறைத் தலை

­ந­க­ராக கர்­நூ­லும் இருக்­கும் என்று அறி­வித்­துள்­ளார்.

முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்­டி­யின் அறி­விப்­புக்கு அம­ரா­வ­தி­யில் தலை­ந­க­ரம் அமைக்க சுமார் 31,000 ஏக்­கர் நிலத்தை கொடுத்த விவ­சா­யி­கள் கடும் எதிர்ப்புத் தெரி­வித்­த­னர். இது தொடர்­பாக பல்­வேறு வகை­யான போராட்­டங்­க­ளி­லும் அவர்­கள் ஈடு­பட்­ட­னர். இந்த விவ­கா­ரம் தற்­போது நீதி­மன்­றத்­தில் விசா­ர­ணை­யில் உள்­ளது.

இந்­நி­லை­யில், நேற்று முன்

தினம் ஸ்ரீகா­கு­ளத்­தில் நடை­பெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி, "செப்­டம்­பர் மாதம் முதல் ஆந்­தி­ரா­வின் நிர்­வாகத் தலை­ந­க­ராக விசா­கப்­பட்­டி­னம் செயல்­படத் துவங்­கும். நான் அங்கு குடி­யேற இருக்­கி­றேன்," என்று அறி­வித்­தார்.

முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்­டி­யின் இந்த அறி­விப்­புக்குக் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ள தெலுங்கு தேசக் கட்சித் தலை­வர் சந்­தி­ர­பாபு நாயுடு, "ஜெகன்­மோ­கன் ரெட்­டி­யின் அறி­விப்பு மாநி­லத்­தின் மற்றப் பகு­தி­க­ளைச் சேர்ந்த மக்­க­ளு­டன் சேர்த்து விசா­கப்­பட்­டி­ன மக்­க­ளை­யும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்கி உள்­ளது.

"விசா­கப்­பட்­டின மக்­கள் இனி­மேல் ஆளும் கட்­சி­யி­னர் இங்கு நில ஆக்­கி­ர­மிப்­பில் ஈடு­ப­டு­வார்­கள். இருக்­கும் நிலத்தை எப்­படிக் காப்­பாற்­றிக்கொள்­வது என்று புலம்பத் துவங்­கி­யுள்­ள­னர்," என்று கூறி­னார்.