இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இம்முறை 2,613 வேட்பாளர்கள் களம்காண்கின்றனர். எதிர்வரும் மே 10ஆம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இதையடுத்து அஙகுள்ள 224 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இம்முறை களம் காண்பவர்களில் 2,427 பேர் ஆண்கள் என்றும் 184 பேர் பெண்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மூன்றாம் பாலினத்தினர் இருவரும் போட்டியிடுகின்றனர். பாஜக, காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி நிலவுவதால் பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
ஆபரேஷன் காவேரி தொடங்கியது: சூடானில் இருந்து 500 பேர் மீட்பு
புதுடெல்லி: உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள 278 இந்தியர்கள் சூடான் நாட்டில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தியர்களை மீட்பதற்காக 'ஆபரேஷன் காவேரி' என்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் ஏற்பாட்டில் அவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சவுதி அரேபியா, பிரான்ஸ் நாடுகளும் மீட்புப் பணியில் இந்தியாவுக்கு கைகொடுத் துள்ளன. இந்தியர்களை மீட்டு வரும் பணிகள் தொடர்ந்து நடப்பதாகவும் அனைவரும் பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். அனைவரையும் மீட்டுவர உறுதிபூண்டுள்ளதாக அவர் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறையினரை தாக்கிய ஆந்திர முதல்வரின் சகோதரி கைது
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் காவல்துறை யினரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஆந்திர முதல்வரின் சகோதரியும் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சித் தலைவியுமான ஷர்மிளா கைது செய்யப்பட்டுள்ள னர். அண்மையில் தெலுங்கானா பொதுத் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து சிறப்புக் குழு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் ்ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட ஷர்மிளா, சிறப்புக் குழு அலுவலகத்துக்குச் செல்ல இருந்தார். எனினும், அவருக்குப் பாதுகாப்பு அளிக்கும் காவல்துறையினர் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடும் கோபமடைந்த ஷர்மிளா, பெண் காவலர், காவல் துணை ஆய்வாளர் இருவரையும் தன் கையால் தள்ளிவிட்டு தாக்கினார். இதையடுத்து தெலுங்கானா காவல்துறை ஷர்மிளாவைக் கைது செய்துள்ளது. அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

