மணிஷ் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

மணிஷ் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

2 mins read
9220ec49-3cf8-4f61-b320-714cef626936
-

புதுடெல்லி: மது­பானக் கொள்கை முறை­கேடு தொடர்­பாக கைது செய்­யப்­பட்­டுள்ள டெல்லி முன்­னாள் துணை முதல்­வர் மணிஷ் சிசோ­டியா மீதான வழக்­கில் சிபிஐ கூடு­தல் குற்­றப் பத்­தி­ரி­கையை தாக்­கல் செய்­துள்­ளது.

இத­னால் இவ்­வ­ழக்­கில் அவருக்கு கடும் நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த வழக்கு தொடர்­பாக கடந்த வாரம் டெல்லி முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வா­லி­டம் ஏறக்­கு­றைய ஒன்­பது மணி நேரத்­துக்கு சிபிஐ அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். மேலும் தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவின் மகள் கவி­தா­வி­ட­மும் விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

அத்துடன், கவி­தா­வின் முன்­னாள் கணக்­காய்­வா­ளர் புட்சி பாபு, மது­பான விற்­ப­னை­யா­ளர் உள்­ளிட்ட மேலும் சில­ரது பெயர்­கள் கூடு­தல் குற்­றப்­பத்­தி­ரி­கை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் கடும் ஆவே­ச­ம­டைந்­துள்ள முதல்­வர் கெஜ்­ரி­வால், ஆம் ஆத்மி தேசி­யக் கட்­சி­யாக மாறி­யுள்­ள­தால், மத்­திய அரசு தங்­களை குறி­வைத்­துள்­ள­தா­கச் சாடி­யுள்­ளார். ஆம் ஆத்மி கட்­சித் தலை­வர்­கள் மேற்­கொள்­ளும் வளர்ச்­சிப் பணி­க­ளைக் களங்­கப்­ப­டுத்­தவே வழக்கு தொடுக்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­வித்­தார்.

தம் மீதான அனைத்து குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கும் மறுப்பு தெரி­வித்­துள்ள மணிஷ் சிசோ­டியா, தமக்கு எதி­ராக சிபி­ஐ­யி­டம் எந்த ஆதா­ர­மும் இல்லை என்று நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்த பிணை மனு­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார். கடந்த பிப்­ர­வரி 26ஆம் தேதி அவரை சிபிஐ கைது செய்­தது. இந்­நி­லை­யில், அவர் மீது துணைக் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­ழக்கு விசா­ரணை மேலும் விரி­வ­டை­யும் வாய்ப்­புள்­ள­தா­க­வும் மேலும் சிலர் சிக்­கக்­கூ­டும் என்­றும் சிபிஐ தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே மணிஷ் சிசோ­டி­யா­வின் மனைவி சீமா உடல்­ந­லக் குறை­வால் மருத்­துவமனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.