புதுடெல்லி: அண்மையில் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்திய மூவர்ண கொடியை அவமதித்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய புலனாய்வு முகைமை (என்ஐஏ) திட்டமிட்டுள்ளது.
அம்முகைமையின் அதிகாரிகள் அடங்கிய குழு லண்டன் செல்கிறது. அங்கு தூதரகம் தாக்கப்பட்டது தொடர்பாக முக்கிய வாக்குமூலங்களை அதிகாரிகள் பதிவு செய்ய உள்ளனர்.

