'சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் ஒற்றுமைக்கு வலுசேர்க்கிறது'

'சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் ஒற்றுமைக்கு வலுசேர்க்கிறது'

2 mins read
33dd0158-cded-453c-bc25-127b94db08ce
-

புது­டெல்லி: குஜ­ராத்­தில் நடை­பெற்ற சௌராஷ்­டிரா-தமிழ் சங்­க­மம், நாட்­டின் ஒற்­று­மைக்கு வலு­சேர்க்­கிறது என்று பிர­த­மர் நரேந்­திர மோடி கூறி­யி­ருக்­கி­றார்.

தமி­ழ­கத்­தில் வசிக்­கும் சௌராஷ்­டிரா மொழி பேசும் மக்­களை அவர்­க­ளின் பூர்­வீக இட­மான குஜ­ராத்­தின் சௌராஷ்­டிரா பகு­திக்கு அழைத்­துச் செல்­லும் சௌராஷ்­டிரா-தமிழ் சங்­க­மம் நிகழ்ச்சி, இம்­மா­தம் 17ஆம் தேதி தொடங்­கி­யது.

நேற்று அதன் நிறைவு அங்­கம் இடம்­பெற்­றது.

நிறைவு விழா­வில் பிர­த­மர் மோடி காணொளி வாயி­லாக உரை­யாற்­றி­னார்.

"சர்­தார் வல்­ல­பாய் பட்­டே­லுக்­கும் மகா­கவி சுப்­ர­ம­ணிய பார­தி­யா­ருக்­கும் இருந்த தேசிய உணர்வு, இந்த சௌராஷ்­டிரா-தமிழ் சங்­க­மம் நிகழ்ச்­சி­யின் மூலம் மீண்­டும் உயிர் பெற்­றி­ருக்­கிறது," என்று பிர­த­மர் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

"இத்­த­கைய நிகழ்ச்­சி­கள், நாட்­டின் ஒற்­று­மையை மேலும் வலுப்­ப­டுத்­து­கின்­றன. எனவே, இந்­நி­கழ்ச்­சி­யின் மூலம் சர்­தார் வல்­ல­பாய் பட்டே­லின் ஆசி இந்­தி­யர்­கள் அனை­வ­ருக்­கும் கிடைத்­தி­ருக்­கிறது," என்­றார் திரு மோடி.

"சுதந்­தி­ரப் போராட்­டத் தியா­கி­க­ளான நம் முன்­னோர்­கள் ஒரே பார­தம், உன்­னத பார­தம் என்­ப­தைப் பார்க்­கத் துடித்­த­னர்.

"அவர்­க­ளின் கனவை இந்த நிகழ்ச்சி நன­வாக்கி இருக்­கிறது. சுதந்­தி­ரம் அடைந்து 75 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நாட்­டில் ஏற்­பட்­டி­ருக்­கும் புதிய கலா­சா­ரப் பாரம்­ப­ரி­யத்­தின் எடுத்­துக்­காட்டுக­ளாக இது­போன்ற நிகழ்ச்­சி­கள் திகழ்­கின்­றன," என்­றார் பிர­த­மர்.

இந்­தி­யா­விற்கு தற்­போது தேவை நல்­லி­ணக்­கம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

நாட்டு மக்­க­ளுக்கு இடையே ஒத்­து­ழைப்பு இருக்க வேண்­டுமே தவிர, கலா­சார மோதல்­கள் இருக்­கக்­கூ­டாது.

"நாட்­டிற்­குத் தேவை இத்­த­கைய சங்­க­மங்­கள்­தான்; போராட்­டங்­கள் அல்ல.

"வேறு­பா­டு­க­ளைக் கண்­ட­றி­வது நமக்­குத் தேவை­யில்லை. உணர்­வு­பூர்­வ­மான ஒற்­று­மை­தான் தேவை.

"இந்­தி­யா­வின் தனித்­து­வ­மான பாரம்­ப­ரி­யமே, அனை­வ­ரை­யும் இணைத்­துக்­கொள்­ளும் பண்பு­தான்.

"ஏற்­றுக்­கொள்­வ­தும் அனை­வ­ரோ­டும் இணைந்து முன்­னே­றிச் செல்­வ­துமே நாட்­டின் பாரம்­ப­ரி­யப் பண்­பு­கள்.

"பல நூற்­றாண்­டு­க­ளாக இந்­தி­யா­வில் சங்­க­மங்­கள் நிகழ்ந்து வரு­கின்­றன.

"கும்­ப­மேளா ஒரு­வ­கை­யில் சங்­க­மம்­தான். பல்­வேறு சிந்­த­னை­கள், கலா­சா­ரங்­க­ளின் சங்­க­மம் அது.

"நாட்­டில் நிகழ்ந்­த­அத்­த­கைய நிகழ்ச்­சி­கள் ஒவ்­வொன்­றுமே ஒற்­று­மைக்கு முக்­கி­யப் பங்­காற்றி இருக்­கின்­றன. நாடு சுதந்­தி­ரம் அடைந்து தற்­போது 75 ஆண்­டு­கள் ஆகி­யுள்ள நிலை­யில், சௌராஷ்­டிரா-தமிழ் சங்­க­மம் நிகழ்­கிறது. இது நர்­மதை, வைகை எனும் நதி­க­ளின் சங்­க­மம். இது தாண்­டியா நட­னம், கோலாட்­டம் இரண்­டின் சங்­க­மம்'' என்று திரு மோடி கூறி­னார்.