எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு தொடர்பில் கூட்டுப் பணிகள்

எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு தொடர்பில் கூட்டுப் பணிகள்

2 mins read
34309110-ed33-4c83-9669-8eb955f1107a
-

புதுடெல்லி: எரி­சக்தி, உண­வுப் பாது­காப்பு ஆகிய அம்­சங்­கள் தொடர்­பில் இந்­தியா மற்ற நாடு­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றும் என்று வெளி­யு­றவு அமைச்­சர் எஸ். ஜெய்­சங்­கர் கூறி­யுள்ளார்.

பனா­மா­வில் நடை­பெ­றும் நான்­கா­வது இந்­தியா-மத்­திய அமெ­ரிக்க ஒருங்­கி­ணைப்­புக் கட்­ட­மைப்பு ('சிகா') அமைச்­சர்­நிலைக் கூட்­டத்­தில் அவர் உரை­ஆற்­றி­னார்.

தெற்கு நாடு­கள் எதிர்­கொள்­ளும் உட­னடி உல­கச் சவால்­கள் எரி­சக்­தி­யும் உண­வுப் பாது­காப்­பும் என்று குறிப்­பிட்ட அமைச்­சர் ஜெய்­சங்­கர், பல்­வேறு அனைத்­து­லக, பன்­மு­னைக் கருத்­த­ரங்­கு­களில் இந்­தி­யாவை ஆத­ரிக்­கும் 'சிகா' அமைப்­பிற்கு நன்றி தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வு­டன் அது வலு­வான உறவு கொண்­டி­ருப்­ப­தற்­கும் அவர் நன்றி கூறி­னார்.

எரி­சக்­தி­யும் உண­வுப் பாது­காப்­பும் உட­ன­டிச் சவால்­கள் என்­ற­போ­தி­லும் வளர்ச்சி, மேம்­பாடு, வர்த்­த­கம், முத­லீடு, வேலை­வாய்ப்பு, வறுமை உள்­ளிட்ட நீண்­ட­கா­லச் சவால்­களும் இருப்­பதை அமைச்­சர் ஜெய்­சங்­கர் சுட்­டி­னார்.

இந்­தியா கூடு­த­லா­கச் செய­லாற்­றத் தயா­ராக இருப்­ப­தா­கத் தெரி­வித்த அவர், அதே­போன்ற ஒத்­து­ழைப்பை 'சிகா' அமைப்­பின் நாடு­க­ளி­ட­மும் எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறி­னார்.

உண­வுப் பாது­காப்­புக்கு நீண்ட­கா­லத் தீர்­வாக சிறு தானிய உற்­பத்­தியை விரி­வு­ப­டுத்த இந்­தியா திட்­ட­மி­டு­கிறது என்று தம் உரை­யில் திரு ஜெய்­சங்­கர் குறிப்­பிட்­டார்.

மின்­னி­லக்­கம், புதிய வர்த்­தக நிறு­வ­னங்­கள், மருந்­தாக்­கம், எரி­சக்­தித் தயா­ரிப்பு, அறி­வி­யல், தொழில்­நுட்­பம் போன்ற அம்­சங்­களில் 'சிகா' அமைப்­பைச் சேர்ந்த நாடு­க­ளு­டன் இணைந்து பணி­யாற்ற இந்­தியா விரும்­பு­வ­தாக அவர் கூறி­னார்.

'ஜி20' கூட்­ட­மைப்­பின் தலை­மைத்­து­வத்தை ஏற்­றுள்ள இந்­தியா 'ஒரே பூமி, ஒரே குடும்­பம், ஒரே எதிர்­கா­லம்' எனும் கொள்­கையை நம்­பு­வ­தா­க­வும் 'சிகா' நாடு­க­ளு­ட­னும் அதையே பின்­பற்ற விரும்­பு­வ­தா­க­வும் அமைச்­சர் ஜெய்சங்கர் கூறி­னார்.