சண்டிகர்: பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், ஐந்து முறை முதல்வராகப் பதவி வகித்தவருமான பிரகாஷ் சிங் பாதல் (படம்) காலமானார். அவருக்கு வயது 95.
வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனால், சில நாள்களுக்கு முன்னர் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். பிரதமர் நரேந்திர மோடி, திரு பாதலின் நல்லுடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
திரு பாதலின் மறைவை முன்னிட்டு நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சு கூறியது.