புதுடெல்லி: போர்ன்விட்டா பாக்கெட்டுகளிலுள்ள விவரக்குறிப்புகளை மாற்றும்படியும், தவறான விளம்பரங்களை நிறுத்தும்படியும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதில், இந்திய உணவுப் பாதுகாப்புத் தர ஆணையம் நிர்ணயம் செய்துள்ள அளவின்படி, போர்ன்விட்டாவில் உள்ள பொருள்களில் அளவு இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
போர்ன்விடாவில் உள்ள சர்க்கரை அளவு நிர்ணயம் செய்ததைவிட அதிகமாக உள்ளது.மால்டோடெக்ஸ்டிரின் என்ற லிக்விட் குளூகோஸ் போன்றவையும் தனியாக சேர்க்கப்பட்டுள்ளது. இது விதிமுறையை மீறிய கூடுதல் சர்க்கரை அளவு.
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் என்ற பெயரில் தவறாக வழிநடத்தும் வகையில் போர்ன்விட்டாவின் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.
போர்ன்விட்டா குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் என்பதற்கு அறிவியல்பூர்வ சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும்.உடனடியாகக் குழந்தைகளை மையமாக கொண்டு வெளியாகும் விளம்பரங்களை நிறுத்த வேண்டும். பாக்கெட்டுகளில் உள்ள லேபிள்களையும் மாற்றி போர்ன்விட்டாவில் உள்ள உண்மையான பொருள்களைக் குறிப்பிட வேண்டும்.
மேலும், அடுத்த 7 நாள்களுக்குள் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மான்டலெஸ் இன்டர்நேஷனல் தயாரித்து சந்தையில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் என்று விளம்பரம் செய்து விற்பனை செய்யப்பட்டு வரும் பொருள் போர்ன்விட்டா.

