பெண் அரசு ஊழியருக்கு பணி நேரம் குறைப்பு

பெண் அரசு ஊழியருக்கு பணி நேரம் குறைப்பு

1 mins read
9c6902bb-566e-44bd-9b2f-8e4d1ac24522
-

புதுச்சேரி: அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் ஒருநாள் இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு செய்யப்படுகிறது.

"அரசுத் துறையில் பணியாற்றும் பெண்கள் வாரம் ஒருநாள் வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு வேலைக்கு வருவதற்கு பதிலாக 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும். அரசுத் துறையில் அமல்படுத்தி னால் அதை தனியார் நிறுவனங்களும் பின்பற்று வார்கள் என்று நம்பிக்கை உள்ளது," என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

வெறிநாய் கடிக்கான கருத்தரங்கில் கலந்துகொண்ட ஆளுநர் தமிழிசையும் முதலமைச்சர் ரங்கசாமியும் கூட்டாக இதனை அறிவித்தனர்.