கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்தனர்.
இங்குள்ள புர்பா பர்தமான் மாவட்டத்தில் நால்வரும் முர்ஷிதாபாத், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் தலா இருவரும் பஷிம் மிட்னாப்பூர், ஹவுரா ரூரல் பகுதிகளில் தலா மூவரும் என மொத்தம் 14 பேர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தபோது இடியுடன் மழை பெய்து, மின்னல் தாக்கியதில் அவர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

