பீரங்கிப் படையில் ஐந்து பெண்மணிகள்

பீரங்கிப் படையில் ஐந்து பெண்மணிகள்

2 mins read
5f202f07-a5de-40a7-b861-ddb1f0847c6e
-

ராணுவ வரலாற்றில் முதல்முறையாக சாதனை

புது­டெல்லி: இந்­திய ராணுவ வர­லாற்­றில் முதல்­மு­றை­யாக, பீரங்­கிப் படை­யில் 5 பெண் அதி­கா­ரி­கள் பணி­யில் இணைந்­துள்­ளனா். அவா்க­ளுக்கு சீன, பாகிஸ்­தான் எல்­லை­யோரப் பிரி­வு­களில் பணி வழங்­கப்­பட்­டுள்­ளது.

லெப்­டி­னன்ட் மேஹக் சைனி, லெப்­டி­னன்ட் சாக்ஷி துபே, லெப்­டி­னன்ட் அதிதி யாதவ், லெப்­டி­னன்ட் பயஸ் முத்­கில், லெப்­டி­னன்ட் ஆகாங்ஷா ஆகிய ஐவ­ரும் சென்­னை­யில் உள்ள அதி­கா­ரி­கள் பயிற்சி அகா­ட­மி­யில் சனிக்­கி­ழமை வெற்­றி­க­ர­மாக பயிற்­சியை நிறைவு செய்­த­தைத் தொடா்ந்து, பீரங்­கிப் படை­யில் இணைந்­தனா்.

இவா்களில் மூவ­ருக்கு சீன எல்­லையை ஒட்­டிய ராணு­வத்­தின் முன்­களப் பிரி­வு­க­ளி­லும் மற்ற இரு­வ­ருக்கு பாகிஸ்­தான் எல்லை அருகே சவால்­கள் நிறைந்த இடங்­க­ளி­லும் பணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­திய பீரங்­கிப் படை­யில் மொத்­தம் 280 பிரி­வு­கள் உள்­ளன. போஃபா்ஸ் ஹோவிட்­சா்ஸ், தனுஷ், எம்-777 ஹோவிட்­சா்ஸ், கே-9 வஜ்ரா உள்­ளிட்ட பல்­வேறு வகை­யான பீரங்கி அமைப்­பு­கள் கையா­ளப்­ப­டு­கின்­றன.

முக்­கி­ய­மாக அனைத்து பீரங்கி அமைப்­பு­க­ளை­யும் கையா­ளும் பயிற்சி மற்­றும் அனு­ப­வத்தை பெறும் வகை­யில் பெண் அதி­கா­ரி­கள் பணி­யாற்­ற­வுள்­ளனா்.

கண்­கா­ணிப்பு மற்­றும் இலக்கு கைப்­பற்­று­தல் பிரி­வில் லெப்­டி­னன்ட் சைனி, களப் பிரி­வு­களில் சாக்ஷி, அதிதி, நடுத்­த­ரப் பிரி­வில் பயஸ், ஆகாங்ஷா ஆகியோா் பணி­யில் இணைந்­துள்­ளனா்.

பீரங்­கிப் படை­யில் பெண் அதி­கா­ரி­கள் பணி­யாற்ற அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தன் மூலம் ராணு­வத்­தில் அவா்க­ளின் பங்­கேற்பு விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்று ராணுவ வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

இவா்கள் தவிர 19 ஆண் அதி­கா­ரி­களும் இப்­ப­டை­யில் இணைந்­துள்­ளனா். ஆண் அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­படும் அதே வாய்ப்­பு­களும் சவால்­களும் பெண் அதி­கா­ரி­

க­ளுக்­கும் வழங்­கப்­படும் என்று அதி­காரி ஒருவா் தெரி­வித்தாா்.

கடந்த 2019ல் ராணு­வக் காவல் படை­யில் வீராங்­க­னை­களை நிய­மிப்­ப­தற்­கான முக்­கி­யத்­து­வம் வாய்ந்த நடை­மு­றையை ராணு­வம் தொடங்­கி­யது. அதைத்­தொ­டா்ந்து, ராணு­வத்­தின் பல்­வேறு படைப் பிரி­வு­களில் பெண்­க­ளுக்­கான பணி­யி­டங்­கள் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ராணு­வத்­தின் பொறி­யி­யல் படைப் பிரி­வைச் சோ்ந்த பெண் தள­பதி சிவா செள­ஹான், உல­கின் மிக உய­ர­மான போா்முனை­யான சியாச்­சி­னில் கடந்த ஜன­வ­ரி­யில் பணி­ய­மா்­த்­தப்­பட்டாா் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.