உயிர்ப்பலி வாங்கிய அரிக்கொம்பன்

உயிர்ப்பலி வாங்கிய அரிக்கொம்பன்

2 mins read
98762b6a-e9d9-40f6-991f-3cc19246c31a
-

கேரளா: கேரளா, இடுக்கி

சின்­னக்­கா­னல் பகு­தி­யில்

மக்­களை அச்­சு­றுத்தி வந்த அரிக்­கொம்­பன் யானை­யைப் பிடித்து தமி­ழக கேரள எல்­லை­யில் அமைந்­துள்ள தேனி மாவட்­டத்­தின் கூட­லூர் அருகே வனப் பகு­தி­யில் விடப்­பட்­டது. இது ஆறு பேரைக் கொன்­ற­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

அரிக்­கொம்­பன் ஊருக்­குள் புகு­வ­தும் சாலை­யோர கடை­களில் அரிசி இருக்­கி­றதா என்று தேடிப் பார்த்து, கடையை உடைப்­ப­தும் தேயிலைத் தோட்­டங்­க­ளுக்குச் செல்­லும் பொது­மக்­களை விரட்­டு­வ­தும் குடி­யி­ருப்புப்

பகு­தி­களில் வலம் வந்து மக்­களை அச்­சு­றுத்­து­வ­தும் என்று பொது­மக்­க­ளின் நிம்­ம­தியைக் குலைத்து வந்­தது.

இந்­நி­லை­யில் யானையைப் பிடித்து வேறு பகு­திக்கு கொண்டு செல்ல வேண்­டும் என்று மக்­கள் தொடர் போராட்­டங்­களில் ஈடு­பட்­ட­னர்.

யானையை அமை­திப்­ப­டுத்­தும் கருவி மூலம் பிடிப்­பது அறி­வி­ய­லுக்கு எதி­ரா­னது என விலங்­கு­கள் பாது­காப்பு அமைப்பு நீதிமன்றத்தில் மனு தாக்­கல் செய்­தது. அத­னால் உயர்­நீதி மன்­றம் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்­கக்­கூ­டாது என்று உத்­த­ர­விட்­டது.

இந்த உத்­த­ர­வைக் கண்­டிக்­கும் வித­மாக பொது­மக்­கள் தொடர்ந்து போராட்­டங்­கள் நடத்­தி­ய­தால், யானையைப் பிடிப்­பது தொடர்­பாக ஓர் உயர்­மட்டக் குழுவை நீதி­மன்­றம் நிய­மித்­தது.

இந்த உயர்­மட்டக் குழு யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க பரிந்­துரை செய்­த­தை­ய­டுத்து 150 பேர் கொண்ட வனத்­துறை அதி­கா­ரி­கள் மயக்க ஊசி அடங்­கிய துப்­பாக்­கி­க­ளு­டன் கடந்த இரண்டு நாள்க­ளாக அரிக்­கொம்­பன் யானையைத் தேடி வந்­த­னர்.

அரிக்­கொம்­பனைப் பிடிக்க 4 கும்கி யானை­களும் பயன்­

ப­டுத்­தப்­பட்­டன.

இந்நிலை­யில் யானை சின்­னக்­கால் அருகே உள்ள வனப்­ப­கு­தி­யில் இருப்­பது தெரிய வந்­தது.

இதை­ய­டுத்து வனத்­து­றை­யி­னர் பட்­டா­சு­கள் வெடித்து யானையை பாலம் பகுதி வழி­யாகக் கொண்டு வந்­த­னர்.

பின்­னர் மயக்க ஊசி செலுத்தி அதன் கால்­கள் கட்­டப்­பட்டு, கண்ணில் துணி போர்த்தப்பட்டு கும்கி யானை­கள் உத­வி­யு­டன் யானையை வாக­னத்­தில் ஏற்றி அதனை குமுளி பகு­திக்கு கொண்­டு­வந்து கூட­லூர் அருகே வனப் பகு­தி­யில் விட்­ட­னர்.