புதுடெல்லி: மன் கி பாத் எனும் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் 100வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.
அதில் "தமிழக பழங்குடியின பெண்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த டெரகோட்டா குவளைகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
"தமிழ்நாட்டில் 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து வேலூரில் உள்ள நாக நதிக்கு புத்துயிர் அளித்துள்ளனர். பல பரப்புரைகள் பெண்களால் வழிநடத்தப்பட்டு முயற்சிகளை முன்னுக்கு கொண்டு வர இந்நிகழ்ச்சி சிறந்த தளமாக உள்ளது.
"நாட்டின் பெண் சக்தியின் நூற்றுக்கணக்கான எழுச்சியூட்டும் கதைகளை மனதின் குரலில் குறிப்பிட்டு இருப்பது எனக்கு நிறைவான விஷயமாகும்.
"ராணுவமாக இருந்தாலும் விளையாட்டு உலகமாக இருந்தாலும் பெண்களின் சாதனைகளைப் பற்றி நான் பேசும்போது அது அதிகமாக பாராட்டப்பட்டது," என்று பேசினார்.

