புதுடெல்லி: மே மாதத்தில் புதுடெல்லி, பீகார், ஒடிசாவில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமான அளவு வெப்பம் நிலவும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதைப்போல வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில் இரவு நேர வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனக்கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், பகல் நேர வெப்பநிலை வழக்கத்தைவிட குறைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.