ஸ்ரீநகர்: இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை பரப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட 14 செயலிகளை இனி பயன்படுத்த இயலாத அளவில் முடக்கி உள்ளது மத்திய அரசு.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, BChat, IMO, Element, Second line, Zangi, Threema உள்ளிட்ட 14 அலைபேசி குறுஞ்செய்தி செயலிகளை இனி பயன்படுத்த முடியாது. மத்திய உள்துறை அமைச்சும் உளவு அமைப்புகளும் அளித்த பரிந்துரையை ஏற்று இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் தங்களின் ஆதரவாளர்களைத் தொடர்பு கொள்வதற்காக இந்தச் செயலி களைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் செயலி களுக்கு இந்தியாவில் பிரதி நிதிகள் யாரும் இல்லை என்றும் இதுகுறித்து யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

