இந்தியப் பொறியாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஜப்பான்

இந்தியப் பொறியாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஜப்பான்

1 mins read
0247170e-4080-4fb1-8a35-d5159be30f71
-

மும்பை: மும்­பைக்­கும் குஜ­ராத்­தின் அக­ம­தா­பாத்­துக்­கும் இடை­யி­லான அதி­வேக ரயி­லுக்­கான பாதை­யைக் கட்­டு­வ­தற்கு முன்பு அதற்­குத் தேவை­யான பயிற்சியை 1,000 இந்­தி­யப் பொறி­யா­ளர்­களுக்கு ஜப்­பா­னிய நிபு­ணர்­கள் அளிக்க இருக்­கின்­ற­னர்.

ஜப்­பா­னில் பயன்­ப­டுத்­தப்­படும் 'ஜே ஸ்லாப்' முறை, மும்பை-அக­ம­தா­பாத் அதி­வேக ரயில் பாதை­யி­லும் பயன்­ப­டுத்­தப்­படும்.

இந்­தத் தனித்­து­வம் வாய்ந்த முறை­யைக் கட்ட தொழில்­நுட்­பர்­க­ளுக்கு உயர்­நிலை திறன்­கள் தேவைப்­படும் என்று இந்­தி­யா­வின் தேசிய அதி­வேக ரயில் சேவை நிறு­வ­னம் தெரி­வித்­தது.

இந்­தி­யப் பொறி­யா­ளர்­களுக்கு அளிக்­கப்­படும் பயிற்சி 15 அம்­சங்­களில் கவ­னம் செலுத்­தும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கட்­டு­மா­னத் தள மேலா­ளர்­களுக்­கான பயிற்சி, ஸ்லாப் தண்­ட­வா­ளத்­தைப் பொருத்­தும் பணி­கள், வெல்­டிங் பணி­கள் போன்ற பயிற்­சி­கள் அளிக்­கப்­படும்.

"இந்­தி­யப் பொறி­யா­ளர்­கள், மேற்­பார்­வை­யா­ளர்­கள், தொழில்­நுட்­பர்­கள் ஆகி­யோ­ருக்­கு ஏறத்­தாழ 20 ஜப்­பா­னிய நிபு­ணர்­கள் பயிற்சி அளித்து அவர்­க­ளுக்­குத் தேவை­யான திறன்­கள் உள்ளதா என்­பதை உறுதி செய்­வர்," என்று தேசிய அதிவேக ரயில் சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜேந்திர பிரசாத் கூறினார்.