தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவில் இந்திய மாணவர் எண்ணிக்கை 2022ல் அதிகரிப்பு; சீன மாணவர்கள் குறைவு

1 mins read
57a7b093-e9fc-4a10-a0e1-5ba87c7ea6b3
-

வாஷிங்­டன்: இந்­தியா, சென்ற ஆண்­டில் அதற்கு முந்­தைய ஆண்­டை­விட அதிக மாண­வர்­களை அமெ­ரிக்­கா­வில் படிக்க அனுப்பி வைத்­தது.

அதே­ கா­ல­க்கட்­டத்­தில் சீனா­வில் இருந்து அமெ­ரிக்­கா­வுக்குக் கல்வி கற்க சென்ற மாண­வர்­களின் எண்­ணிக்கை முன்­பை­விட குறை­வாக இருந்­தது என்று ஒரு செய்தி கூறு­கிறது.

அமெ­ரிக்­கா­வில் படிக்­கும் ஆசிய மாண­வர்களில் சீனர்கள், இந்­தி­யர்­கள் அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த 2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் சென்ற ஆண்டில் அமெ­ரிக்­கா­வுக்குப் படிக்கச் சென்ற சீன மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை 24,796 குறைந்­திருந்­தது.

அதே­வே­ளை­யில், இந்­தி­யா­வில் இருந்து அமெ­ரிக்­கா­வுக்குக் கல்வி கற்க சென்­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை 64,300 அதி­க­மாக இருந்­தது என்று அமெ­ரிக்க குடி­நு­ழைவு, சுங்­கச்­சா­வடி அம­லாக்­கத் துறை வரு­டாந்­திர அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

அமெ­ரிக்­க மாநி­லங்­களி­லேயே கலி­ஃபோர்­னி­யா­வில் தான் 225,173 அனைத்­து­லக மாண­வர்­கள் கல்வி கற்­கி­றார்­கள்.

இது அமெ­ரிக்­கா­வில் பயி­லும் மொத்த வெளி­நாட்டு மாண­வர்­களில் 16.5% ஆகும் என்று அந்த ஆய்­வ­றிக்கை கூறு­கிறது.

2021-2022 கல்வி ஆண்­டில் அமெ­ரிக்­கா­வில் படித்த இந்­திய மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை 199,182 ஆகும். இது அதற்கு முந்தைய ஆண்­டை­விட 20% அதி­கம்.