கரிமக்கழிவை பெரிதும் குறைக்க இந்தியா நல்லிணக்க முயற்சி

கரிமக்கழிவை பெரிதும் குறைக்க இந்தியா நல்லிணக்க முயற்சி

1 mins read
7259fa92-f604-4dd7-be7f-19cd34e7b4b0
-

புது­டெல்லி: நிலக்­கரி, எண்ணெய், இயற்கை எரி­வாயு போன்ற எரி­பொ­ருள்­க­ளின் பய­னீட்டை நிறுத்து­வ­தற்­கான காலக்­கெடு ஒன்றை நிர்­ண­யிப்­ப­தற்­குப் பதிலாக, கரி­மக்­க­ழிவு அள­வைக் குறைப்­ப­தற்­கான வழி­காட்டி திட்­டம் ஒன்றை ஜி20 நாடு­கள் தேர்ந்­தெ­டுத்­துக்கொள்­ளும் வகை­யில் கருத்­தி­ணக்­கம் ஒன்றை எட்­டு­வதற்கு இந்­தியா முயன்று வரு­கிறது.

சீனா ஆத­ர­வு­டன் இந்­தியா அந்த முயற்­சி­களில் இறங்கி இருப்­ப­தாக இந்­திய அர­சை சேர்ந்த மூன்று அதி­காா­ரி­கள் தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

ஜி20 தொழில்­துறை நாடு­களின் தலை­மைப் பொறுப்பை இப்­போது இந்­தியா ஏற்று இருக்­கிறது. வரும் செப்­டம்­ப­ரில் இந்­தி­யா­வில் நடக்­க­வி­ருக்­கும் ஜி20 உச்­ச­நிலை மாநாட்­டில் அறிக்கை ஒன்று வெளி­யி­டப்­பட உள்­ளது.

'பல்­வேறு எரி­சக்தி வழி­மு­றை­கள்' என்ற ஒரு பதத்தை அந்த அறிக்­கை­யில் அறி­முக்­கப்­ப­டுத்­தலாம் என்று இந்­தியா ஆர்­வ­முடன் இருக்­கிறது.

இந்த முயற்­சிக்கு சீனா, தென்­னாப்­பி­ரிக்கா உள்­ளிட்ட பல நாடு­கள் ஆத­ரவு அளித்து இருப்­ப­தா­க­வும் அந்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

எரி­சக்தி உரு­மாற்­றத்­திற்­கான பல்­வேறு எரி­சக்தி வழி­மு­றை­கள் ஏற்­பாட்­டின் மூலம் நாடு­கள், அறவே கரி­மக் கழி­வற்ற நிலை­யைச் சாதிக்க முயற்­சி­களை மேற்­கொள்­ளும் அதே­வே­ளை­யில், நிலக்­க­ரியைகூட பயன்­படுத்த விரும்­பி­னால் பயன்­ப­டுத்­த­லாம்.

இந்­தி­யா­வின் குஜ­ராத் மாநிலத்­தில் கடந்த ஏப்­ரல் மாதம் ஜி20 எரி­சக்தி உரு­மாற்ற பணிக்­குழு கூட்­டம் நடந்­தது.

அதில் கலந்­து­கொண்ட பணக்­கார நாடு­கள் நிலக்­கரி பய­னீட்­டுக்கு முடிவு கட்ட காலக்­கெடு ஒன்றை யோச­னை­யா­கத் தெரி­வித்­தன.