புதுடெல்லி: கைது செய்ய வேண்டிய அவசியமில்லாத வழக்குகளில் பிணை வழங்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் அந்த உத்தரவுகளை அமர்வு நீதிபதிகள் பின்பற்றவில்லை என்று மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா சுட்டியதை அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விசாரித்தது. இவ்வாறு பின்பற்றாத நீதிபதிகளிடம் இருந்து பணிகள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுவதுடன் அவர்களுடைய திறனை மேம்படுத்த நீதித்துறை பயிற்சிக் கழகத்திற்கும் அனுப்பி வைக்கப்படுவர் என்று முன்னதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் வழக்குகளில் விசாரணை நீதிமன்றங்கள் பிணை வழங்க தயக்கம் காட்டுவது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும். உத்தரப் பிரதேசத்தில் இவ்வாறு பின்பற்றாத நிலைமை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
இதனால், சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

