பெண் மந்திரவாதி வீட்டிலிருந்து சிறுவன் மீட்பு

1 mins read
bee304a7-294b-48d0-b45d-d300bd87be00
-

திரு­வ­னந்­த­பு­ரம்: வீட்­டில் ஒரு சிறு­வனை சித்­திர­வதை செய்­த­தாகக் கூறி கேரள மாநி­லம் பத்­தி­னம் திட்டா மாவட்­டத்­தில் மலை­யா­ளப்­புழா என்ற இடத்­தில் பெண் மந்­தி­ர­வாதி ஷோபனா என்­ப­வ­ரி­டம் காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்­தி­னர். கைது செய்­யப்­பட்ட அந்த மாது பின்­னர் பிணை­யில் வந்து மீண்­டும் அது­போன்ற மந்­தி­ர­வா­தச் செயல்­களில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்.

ஷோப­னா­வின் வீட்­டி­லி­ருந்து சிறு­வன் ஒரு­வன் அழும் சத்­தம் கேட்டு அக்­கம்­பக்­கத்­தி­னர் அப்­ப­கு­தி­யின் இந்­திய ஜன­நா­யக வாலி­பர் சங்­கத்­தி­டம் தெரி­வித்­தனர்.

அவர்­கள் பெண் மந்­தி­ர­வா­தி­யின் வீட்­டுக்­குள் சென்று பார்த்­த­போது அங்கு அறை­யொன்­றில் சிறு­வன் ஒரு­வன் இருந்­தான்.

தன்­னை­யும் தன் பெற்­றோ­ரை­யும் பெண் மந்­தி­ர­வாதி அடைத்து வைத்­தி­ருப்­ப­தாக ­சி­று­வன் கூறி­னான். காவல் அதி­கா­ரி­களுக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டதை அடுத்து சிறு­வ­னும் அவன் பெற்­றோ­ரும் மீட்­கப்­பட்­டனர்.

மோசடி வழக்கு தொடர்­பில் தம்­மைக் காவ­லர்­கள் கைது செய்­த­தால் அதி­லி­ருந்து வெளி­வர பெண் மந்­தி­ர­வா­தி­யின் உத­வி­யைத் தாம் நாடி­ய­தாக சிறு­வனின் தந்தை கூறி­னார்.

இருப்­பி­னும், பெண் மந்­தி­ர­வாதி ஏற்­பாடு செய்த சிறப்­புப் பூஜைக்கு அவர் பணம் தராத நிலை­யில் மூவ­ரும் நான்கு நாள்­க­ளாக ஓர் அறை­யில் அடைக்­கப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே தலை­ம­றை­வாகி­விட்ட அந்­தப் பெண் மந்­தி­ர­வா­தியைக் காவல் அதி­கா­ரி­கள் தேடி வரு­கின்­ற­னர்.