62 வழக்குகளுடன் தொடர்புடைய அனில் துஜானா உ.பி.யில் சுட்டுக் கொலை

62 வழக்குகளுடன் தொடர்புடைய அனில் துஜானா உ.பி.யில் சுட்டுக் கொலை

1 mins read
48e60c0d-be89-4768-b4f0-33de8908f5e0
-

லக்னோ: உத்­தரப் பிர­தே­சத்­தில் அனில் துஜானா (படம்) என்ற கொள்­ளைக்­கூட்­டத்­தான் காவல் அதி­கா­ரி­க­ளால் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­தாக இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

மீரட் நக­ரில் உத்­தரப் பிர­தேச சிறப்பு அதி­ர­டிப் படையினர் அனில் துஜா­னா­வைச் சுட்­டுக் கொன்­ற­தாக அறி­யப்­ப­டு­கிறது.

கொலை, கொள்ளை, பணம் பறிப்பு உள்­பட அனில் துஜானா மீது 62 வழக்­கு­கள் பதி­வா­கி­யுள்­ளன.

கடந்த மாதம் 10ஆம் தேதி­யன்று சிறை­யி­லி­ருந்து பிணை­யில் வெளி­வந்த அனில் துஜானா, கவு­தம் புத் நகர் வழக்­கில் தனக்கு எதி­ரா­கச் சாட்சி சொன்­ன­வர்­களை மிரட்­டி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

2017ஆம் ஆண்டு தொடங்கி இது­வரை 160க்கும் மேற்­பட்ட என்­க­வுன்ட்­டர்­கள் உ.பி.யில் நடந்­து­விட்­ட­தாக உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது.