பதக்கங்களைத் திரும்ப ஒப்படைக்க முடிவு

பதக்கங்களைத் திரும்ப ஒப்படைக்க முடிவு

2 mins read
4a7887ff-508a-41b3-8830-515a818f590f
-

புது­டெல்லி: பாலி­யல் குற்­றச்­சாட்டு சர்ச்­சை­யில் சிக்­கி­யுள்ள இந்­திய மற்­போர் கூட்­ட­மைப்­பின் தலை­வர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்­யும்­வரை போராட்­டம் தொட­ரும் என அறி­வித்­துள்ள மற்­போர் வீராங்­க­னை­கள், தாங்­கள் வென்ற பதக்­கங்­க­ளை­யும் விரு­து­க­ளை­யும் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்­துள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ள­னர்.

பாஜக எம்­பி­யு­மான பிரிஜ் பூஷண் சரண்­சிங், பாலி­யல் ரீதி­யாக தங்­க­ளைத் துன்புறுத்­தி­ய­தாக ஒரு சிறுமி உட்­பட ஏழு மற்­போர் வீராங்­க­னை­கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ள­னர்.

அவ­ரைக் கைது செய்ய வலி யுறுத்தி டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் கடந்த 23ஆம் தேதி முதல் போராட்­டத்­தில் மற்­போர் வீராங்­கனை­கள் ஈடு­பட்டு வருகின்றனர்.

ஆனால், தன்­மீ­தான குற்­றச் சாட்­டில் உண்மை இல்லை என மறுத்­துள்ள சரண்­சிங், இப்­போ­ராட்­டம் தனக்கு எதி­ரா­னது அல்ல என்­றும் பாஜ­க­வுக்கு எதி­ரா­னது என­வும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இத­னி­டையே, நேற்று முன்­தி­னம் நள்­ளி­ர­வில் ஜந்­தர் மந்­த­ரில் பாது­காப்­புப் பணி­யில் இருந்த காவ­லர்­கள் வீரர், வீராங்­க­னை­களி­டம் மதுபோதையில் தக­ராறு செய்­த­தாக தக­வல் வெளி­யானது.

அப்­போது தள்­ளு­முள்ளு ஏற்­பட்டு, காவ­லர்­கள் தாக்­கி­ய­தில் சில மற்­போர் வீராங்­க­னை­களுக்கு காயம் ஏற்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கிறது.

காமன்­வெல்த் போட்­டி­யில் இந்­தி­யா­வுக்­குத் தங்­கப்­ப­தக்­கம் வென்ற வீராங்­கனை வினேஷ் போகத் பேசி­ய­போது, "இப்­ப­டிப்­பட்ட நாள்­க­ளைக் காண்­ப­தற்­கா­கவா நாட்­டிற்­காக பதக்­கங்­களை வென்­றோம்?" என கண்கலங்­கி­ய­படி கேட்­டார்.

இத­னி­டையே இந்த விவ காரத்­தில் மத்­திய-மாநில அர­சு­கள் மௌ­னம் சாதிப்­ப­தைக் கண்­டிக்­கும் விதத்­தில் விருதுகளை­யும் பதக்­கங்­க­ளை­யும் திரும்ப ஒப்­ப­டைக்க முடிவு செய்துள்ளதாக வீராங்கனை­கள் கூறியுள்­ள­னர்.

ஒலிம்­பிக்­கில் தங்­கப் பதக்­கம் வென்ற ஈட்டி எறி­தல் வீரர் நீரஜ் சோப்ரா டுவிட்­டர் பதி­வில், "நீதி கேட்டு தெருக்­களில் போரா­டும் மல்­யுத்த வீரர்­க­ளைப் பார்ப்­பது வேத­னை­யா­னது. நீதியை நிலை­நாட்ட சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் விரைந்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்,'' என்று கூறி­னார்.

"செல்­வாக்கான பெண்­களுக்கு நீதி கிடைக்­கா­மல் தெருக்­களில் போராட்­டம் நடத்தும் சூழலில், குரல் கொடுக்­காத, வெளி­யில் சொல்­ல­மு­டி­யாத பெண்­க­ளின் நிலை என்ன வாகும்?" என்று ­சமூக ஆராய்ச்சி மைய இயக்­கு­நர் டாக்­டர் ரஞ்­சனா குமாரி வினவியுள்ளார்.