அர­விந்த் கெஜ்­ரி­வால்: நான் ஊழ­லில் ஈடு­பட்­டது நிரூ­பிக்­கப்­பட்­டால் என்­னைத் தூக்­கில் போடுங்­கள்

அர­விந்த் கெஜ்­ரி­வால்: நான் ஊழ­லில் ஈடு­பட்­டது நிரூ­பிக்­கப்­பட்­டால் என்­னைத் தூக்­கில் போடுங்­கள்

1 mins read
2306b677-1b4d-41d6-a636-c590a4856498
-

புது­டெல்லி: டெல்­லி­யில் மது­பான விற்­ப­னைக்­கான உரி­மங்­க­ளைத் தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கி­ய­தில் முறை­கேடு நடந்­துள்­ள­தா­கக் கூறி சிபிஐ வழக்­குப் பதிவு செய்­துள்­ளது.

இந்த வழக்­கில், டெல்­லி­யின் துணை முதல்­வ­ராக இருந்த மணிஷ் சிசோ­டியா ஏற்­கெ­னவே கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

இதே வழக்­கில் பாரத் ராஷ்­டிர சமி­தி­யின் தலை­வ­ரும் தெலுங்­கானா முதல்­வ­ரு­மான கே. சந்­தி­ர­சே­கர ராவின் மகள் கவிதா மற்­றும் டெல்லி முதல்­வ­ரும், ஆம் ஆத்மி கட்­சித் தலை­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் ஆகி­யோ­ரி­டம் சில வாரங்­க­ளுக்கு முன்பு சிபிஐ விசா­ரணை நடத்­தி­யது.

இந்த நிலை­யில் நேற்று முன்­தி­னம் டெல்­லி­யில் 80 மருந்­த­கங்­களை முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால் திறந்து வைத்­தார். அப்­போது உரை­யாற்­றிய அவர், "சிபிஐ, அம­லாக்­கத்­துறை, வரு­மா­னத் துறை என அனைத்­தை­யும் அவர்­கள் எனக்கு எதி­ராக செயல்­பட வைக்­கிறது மத்­திய அரசு.

ஏனெ­னில், அதற்­கெல்­லாம் ஒரே கார­ணம் தான் உள்­ளது. எப்­ப­டி­யா­வது நான் ஒரு திரு­டன் என நிரூ­பிக்க வேண்­டும். நான் பிர­த­மர் மோடி­யி­டம் ஒன்று சொல்­லிக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.

"பிர­த­மர் மோடி அவர்­களே, கெஜ்­ரி­வால் ஊழல்­வாதி என்­றால், இந்த உல­கத்­தில் யாருமே நேர்­மை­யா­ன­வர்­கள் இல்லை.

"கெஜ்­ரி­வா­லுக்கு எதி­ராக ஒரு பைசா ஊழலை நீங்­கள் நிரூ­பிக்­கும் நாளில், என்னை பொது­வெ­ளி­யில் தூக்­கிலி­டுங்­கள் என்று நான் கூற விரும்­பு­கி­றேன். ஆனால் அதற்கு முன்­னால் இந்த நாட­கத்தை நிறுத்­துங்­கள்," என்று அர­விந்த் கெஜ்­ரி­வால் கூறி­னார்.