மருத்துவர்கள் பற்றாக்குறை

மருத்துவர்கள் பற்றாக்குறை

1 mins read
d2ab1a7f-6d65-45de-a792-b9db988eae81
-

புதுடெல்லி: இந்தியா உலகின் ஆக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உருவெடுத்துள்ள நிலையில் அங்கு மருத்துவர்களுக்கான பற்றாக்குறை வெகுவாக அதிகரித்துள்ளது. அங்கு 2020ஆம் ஆண்டு நிலவரப்படி 1,000 நோயாளிகளுக்கு 0.7 மருத்துவர் என்ற விகிதம் நிலவியதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது. கிட்டத்தட்ட அதே அளவு மக்கள் தொகை கொண்ட சீனாவில் அந்த விகிதம் 1,000 நோயாளிகளுக்கு 2.4 மருத்துவர்கள் எனப் பதிவாகியுள்ளது. பாரம்பரிய மருத்துவர்களின் எண்ணிக்கை இந்தக் கணக்கீட்டில் கருத்தில் கொள்ளப்படுவது இல்லை. அரசாங்கம் புதிதாகப் பொது மருத்துவமனைகளைக் கட்டினாலும் மருத்துவர் பற்றாக்குறையால் சுகாதாரக் கட்டமைப்பு சிரமத்துக்குள்ளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.